Published : 02 Apr 2015 10:29 AM
Last Updated : 02 Apr 2015 10:29 AM
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டி யில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஜோகோவிச் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-7 (3), 7-5, 6-0 என்ற செட் கணக்கில் உக்ரைனின் அலெக் சாண்டர் டோல் கோபோலோவை தோற்கடித்தார். விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதல் செட்டை கைப்பற்றிய டோல்கோ போலோவால், பின்னர் ஜோகோ விச்சுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.
வெற்றிக்குப் பிறகு பேசிய ஜோகோவிச், “இந்த ஆட்டத்தில் நான் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானேன். எனக்குள் மிகப் பெரிய ஆக்ரோஷம் பொங்கியது. அதனால் என்னை அமைதிப் படுத்த முயற்சித்தேன். அதை முதல் செட்டின்போது அனை வரும் பார்த்திருக்கலாம். உணர்ச்சி வசப்படுவதை கட்டுப்படுத்த முடிந்ததாலேயே இப்போது வெற்றி பெற முடிந்தது” என்றார்.
ஜோகோவிச் தனது காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயினின் டேவிட் ஃபெரரை சந்திக்கவுள்ளார். ஃபெரர் தனது 4-வது சுற்றில் 7-6 (5), 6-0 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் ஜில்ஸ் சைமனை வீழ்த்தினார்.
முர்ரே 500-வது வெற்றி
மற்றொரு 4-வது சுற்றில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக் கும் பிரிட்டனின் ஆன்டி முர்ரே 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் சர்வதேச தரவரிசையில் 17-வது இடத்தில் இருக்கும் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
இதுவரை கெவின் ஆண்டர் சனுடன் 5 முறை மோதியுள்ள முர்ரேவுக்கு இது 4-வது வெற்றி யாகும். இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான முர்ரேவுக்கு ஒட்டுமொத்தத்தில் இது 500-வது வெற்றியாகும். இதுவரை 31 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார் முர்ரே.
500-வது வெற்றி குறித்துப் பேசிய முர்ரே, “இன்னும் ஏராளமான ஆட்டங்களில் வெல்ல முடியும் என நம்புகிறேன். இப்போது 500-வது வெற்றியைப் பெற்றிருப்பது மிகச்சிறப்பானது. என்னுடைய வயதுக்கு இது சாதாரண விஷயம் அல்ல. தொடர்ச்சியாக வெற்றி பெறுவேன் என நம்புகிறேன்” என்றார்.
ஓபன் எராவில் 500-வது வெற்றியைப் பதிவு செய்த முதல் பிரிட்டன் வீரர் முர்ரே ஆவார். ஒட்டுமொத்தத்தில் 46-வது வீரர் ஆவார். தற்போது விளை யாடி வரும் வீரர்களில் மேற்கண்ட மைல்கல்லை எட்டிய 9-வது வீரர் முர்ரே என்பது குறிப்பிடத்தக்கது.
முர்ரே தனது காலிறுதியில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை சந்திக்கிறார். தீம் தனது 4-வது சுற்றில் 7-6 (5), 4-6, 7-5 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் அட்ரியான் மனாரினோவை தோற்கடித்தார்.
வீழ்ந்தார் வீனஸ்
மகளிர் ஒற்றையர் காலிறுதியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 6-0, 1-6, 5-7 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயினின் கார்லா சுவாரெஸ் நவரோவிடம் தோல்வி கண்டார்.
அரையிறுதியில் சானியா ஜோடி
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி யின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டின் ஹிங்கிஸ் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
போட்டித் தரவரிசையில் முதலி டத்தில் உள்ள இந்த ஜோடி தங்க ளின் காலிறுதியில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலி யாவைச் சேர்ந்த ரொடினோவா சகோதரிகளை (அனாஸ்டாஸியா-அரினா) தோற்கடித்தது.
சானியா-ஹிங்கிஸ் ஜோடி தங்களின் அரையிறுதியில் போட் டித் தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் ஹங்கேரியின் டிமியா பபாஸ்-பிரான்ஸின் கிறிஸ்டினா மேடினோவிக் ஜோடியை சந்திக் கிறது.
கடந்த பிப்ரவரியில் ஜோடி சேர்ந்து விளையாட ஆரம்பித்த சானியாவும், ஹிங்ஸும் தங்களின் முதல் போட்டியான இண்டியன் வெல்ஸில் சாம்பியன் ஆயினர். அதன்பிறகு வலுவான ஜோடியாக உருவெடுத்துள்ள இந்த ஜோடியைப் பற்றித்தான் இப்போது டென்னிஸ் வட்டாரத்தில் பெருமளவில் பேசப்படு கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT