Published : 05 Apr 2015 01:10 PM
Last Updated : 05 Apr 2015 01:10 PM
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டெஸ்ட் அணியில் மார்ட்டின் கப்டில் இடம்பிடித் துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் உள்பட 547 ரன்கள் குவித்ததன் மூலம் மார்ட்டின் கப்டில் மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்கப் பட்டுள்ளார். கடைசியாக 2013-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய கப்டில், இப்போது அதே இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஆடுவதற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
மார்ட்டின் கப்டில் 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றிருந்தாலும், அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைப்பது கடினமே. பயிற்சி போட்டிகளில் அவர் ஆடுவதைப் பொறுத்தே ஆடும் லெவனில் இடம்பெறும் வாய்ப்பு அமையும் என பயிற்சியாளர் மைக் ஹெசன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் வேகப்பந்து வீச்சாளர் மட் ஹென்றிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆடம் மில்னி காயமடைந்ததால் உலகக் கோப்பையில் அறிமுகமான ஹென்றி, தனது சிறப்பான ஆட்டத்தால் இப்போது டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்.
நியூஸிலாந்து அணி இரு டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி, ஒரு டி20 போட்டி ஆகியவற்றில் விளையாடுகிறது. இதுதவிர 3 பயிற்சி போட்டிகளிலும் விளை யாடுகிறது.
டெஸ்ட் தொடர் மே 21-ம் தேதியும், ஒருநாள் தொடர் ஜூன் 9-ம் தேதியும் தொடங்குகின்றன. ஒரேயொரு டி20 போட்டி ஜூன் 23-ம் தேதி நடைபெறுகிறது.
டெஸ்ட் அணி:
பிரென்டன் மெக்கல்லம் (கேப்டன்), கோரே ஆண்டர்சன், டிரென்ட் போல்ட், டக் பிரேஸ்வெல், மார்க் கிரேக், மார்ட்டின் கப்டில், மட் ஹென்றி, டாம் லேத்தம், லியூக் ரோஞ்சி, ஹாமிஷ் ரூதர்போர்டு, டிம் சவுதி, ராஸ் டெய்லர், நீல் வாக்னர், பி.ஜே. வாட்லிங், கேன் வில்லியம்சன்.
ஒருநாள் போட்டி, டி20 அணி:
பிரென்டன் மெக்கல்லம், ஆண்டர்சன், டிரென்ட் போல்ட், கிரான்ட் எல்லியட், கப்டில், ஹென்றி, லேத்தம், மிட்செல் மெக்லீனாகான், நாதன் மெக்கல்லம், ஆடம் மில்னி, ரோஞ்சி, மிட்செல் சான்ட்னெர், டிம் சவுதி, வில்லியம்சன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT