Published : 10 Apr 2015 09:48 AM
Last Updated : 10 Apr 2015 09:48 AM
சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்தியாவின் சாய்னா நெவால் இப்போது 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
சர்வதேச பாட்மிண் டன் தரவரிசையை நேற்று வெளி யிட்டது சர்வதேச பாட்மிண்டன் சம்மேளனம். அதன்படி நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் லீ ஸியூரூய் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இந்திய ஓபன் பாட்மிண்டன் போட்டியின்போது முதல்முறை யாக முதலிடத்தைப் பிடித்த சாய்னா, மலேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டியின் அரையிறுதியில் லீ ஸியூரூயிடம் தோல்வி கண்டதன் மூலம் அந்த இடத்தை இழந்துள் ளார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து காயம் காரணமாக விளை யாடாமல் இருந்த போதிலும் தொடர்ந்து 9-வது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஆடவர் தரவரிசையில் இந்தியா வின் காந்த் தொடர்ந்து 4-வது இடத்தில் உள்ளார்.
இந்தியாவின் எச்.எஸ். பிரணாய் 14-வது இடத்திலும், காஷ்யப் 15-வது இடத்திலும் உள்ளனர். காஷ்யப் இரு இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மகளிர் இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் ஜுவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா ஜோடி ஓர் இடம் முன்னேற்றம் கண்டு 18-வது இடத்தைப் பிடித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT