Published : 06 Apr 2015 09:46 AM
Last Updated : 06 Apr 2015 09:46 AM
ஜப்பானில் நடைபெற்ற மூத்தோர் நீச்சல் போட்டியில் 1,500 மீட்டர் பிரிவில் பங்கேற்ற 100 வயது வீராங்கனை மியகோ நகவ்கா பந்தய தூரத்தை ஒரு மணி நேரம் 15 நிமிடம் 54.39 நொடிகளில் கடந்து அசத்தினார்.
1914-ம் ஆண்டு பிறந்த மியகோ நகவ்கா, 82 வயதில் முழங்கால் மூட்டு வலியால் அவதிப்பட்டார். அதற்கான பயிற்சியாகத்தான் நீச்சல் கற்றுக்கொண்டார். அதற்கு முன்பு வரை அவருக்கு நீச்சல் தெரியாது.
தனது 84-வது வயதில் நகவ்கா மூத்தோர் நீச்சல் போட்டியில் பங்கேற்கத் தொடங்கினார். 88-வது வயதில் 2002-ம் ஆண்டு நியூஸிலாந்தில் நடைபெற்ற உலக மூத்தோர் நீச்சல் போட்டியில் பங்கேற்று 50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
பின்னர் 2004-ம் ஆண்டு உலக மூத்தோர் நீச்சலில், 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர் பிரிவுகளில் வெள்ளிப் பதக்கங்கள் வென்றார்.
தனது 90-வது வயதில் 800 மீட்டர் ஃபிரீஸ்டைல் பிரிவில் தேசிய சாதனை நிகழ்த்திய பிறகு இவருக்கு தேசிய அளவிலான கவனம் கிடைத்தது.
தனது 95-வது வயதில் மூத்தோர் நீச்சலில் 50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் முதல் உலக சாதனை படைத்தார். தற்போது நகவ்கா வசம் 24 உலக சாதனைகள் உள்ளன. தனது 100-வதுவயதில் 1,500 மீட்டர் பிரிவில் பங்கேற்று அசத்தியுள்ளார் நகவ்கா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT