Published : 03 Apr 2015 09:49 AM
Last Updated : 03 Apr 2015 09:49 AM

சுரேஷ் ரெய்னாவுக்கு இன்று திருமணம்

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, தனது குழந்தைப் பருவ தோழியான பிரியங்கா சவுத்ரியை இன்று மணக்கிறார்.

இவர்களுடைய திருமணம் டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடக்கிறது. ரெய்னாவின் திருமணத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள், பிசிசிஐ நிர்வாகிகள் மட்டுமின்றி, பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுரேஷ் ரெய்னாவின் தந்தையும், பிரியங்காவின் தந்தையும் ஒரே இடத்தில் பணிபுரிந்தவர்கள். அதனால் இருவருடைய அம்மாக்களும் நெருங்கிய தோழிகள் ஆயினர். பி.டெக் பட்டதாரியான பிரியங்கா, ஆரம்பத்தில் பெங்களூரில் பணிபுரிந்தார். தற்போது நெதர் லாந்தில் பணிபுரிந்து வரு கிறார்.

பிரியங்காவுக்கு அபிஷேக் சவுத்ரி, விவேக் சவுத்ரி என இரு சகோதரர்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். அபிஷேக் சென்னை யிலும், விவேக் கிரேட்டர் நொய்டாவிலும் வசித்து வருகின் றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x