Published : 01 Apr 2015 02:47 PM
Last Updated : 01 Apr 2015 02:47 PM
மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் இரட்டையர் அரையிறுதிச் சுற்றுக்கு இந்திய-சுவிஸ் இணையான சானியா மிர்சா-மார்டினா ஹிங்கிஸ் தகுதி பெற்றனர்.
கடந்த மாதம் பரிபாஸ் ஓபன் பட்டம் வென்ற சானியா-ஹிங்கிஸ் ஜோடி, தற்போது மியாமியில் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அனஸ்டேசியா ரோடினோவா-அரினா ரோடினோவா இணையை 6-3, 6-4 என்ற செட் கணக்கில் காலிறுதியில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தனர் சானியா-ஹிங்கிஸ் ஜோடி.
டென்னிஸ் அரங்கில் இன்றைய தினங்களில் மிகவும் எதிர்பார்ப்புடன் பேசப்பட்டு வரும் ஜோடியாக சானியா-ஹிங்கிஸ் ஜோடி திகழ்கிறது. கடந்த மார்ச்சில் இந்தியன்வெல்சில் தங்கள் முதல் தொடரிலேயே இருவரும் பட்டம் வென்றனர்.
மியாமி அரையிறுதியில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி ஹங்கேரி-பிரான்ஸ் இணையான டிமீயா பெபோஸ், கிறிஸ்டினா மலடெனோவிச் ஜோடியை எதிர்கொள்கின்றனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT