Last Updated : 16 Apr, 2015 10:04 AM

 

Published : 16 Apr 2015 10:04 AM
Last Updated : 16 Apr 2015 10:04 AM

எனது சாதனையால் ஏராளமான பெண்கள் டென்னிஸை தேர்ந்தெடுப்பார்கள்: சானியா மிர்சா நம்பிக்கை

மகளிர் இரட்டையர் தரவரிசையில் நான் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்திருப்பது ஏராளமான இளம் பெண்கள் டென்னிஸ் விளையாடுவதற்கு தூண்டுகோலாக அமையும் என இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.

இண்டியன்வெல்ஸ், மியாமி மாஸ்டர்ஸ், சார்லஸ்டான் டென்னிஸ் என மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக சாம்பியன் பட்டம் வென்ற சானியா மிர்சா, சர்வதேச தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

சார்லஸ்டான் போட்டியை முடித்துவிட்டு நாடு திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹைதராபாத் விமான நிலையத்தில் செய்தி யாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

இப்போது எனக் குள் வியப்பான உணர்வு ஏற்பட்டி ருக்கிறது. ‘நம்பர் ஒன்’ வீராங்கனை என்ற பெருமையோடு நாடு திரும்பியிருப்பதை சிறப்பானதாகக் கருதுகிறேன். கடுமையான பயிற்சி மற்றும் தியாகங்கள் மூலம் முதலிடத்தைப் பிடித்து சாதித்திருக்கிறேன் என்றார்.

சமீபத்தில் பாட்மிண்டன் வீராங் கனை சாய்னாவும் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே அவர் முதலிடத்தை இழந்தார்.

அதோடு ஒப்பிட்டு பேசியா சானியா, ‘நானும், சாய்னாவும் முதலிடத்தைப் பிடித்து சாதித்திருக்கிறோம். ஏராளமான இளம் பெண்கள் டென்னிஸ் விளையாட முன்வருவார்கள் என நம்புகிறேன்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x