Last Updated : 21 Apr, 2015 10:21 AM

 

Published : 21 Apr 2015 10:21 AM
Last Updated : 21 Apr 2015 10:21 AM

ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி ராஜினாமா

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் முகமது நபி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 2 ஆண்டுகளுக்கும் மேலாக கேப்டனாக செயல்பட்ட அவர், தனது மோசமான பார்ம், அணிக்கு பெரிய அளவில் வெற்றி தேடித்தர முடியாதது ஆகிய காரணங்களால் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு முகமது நபி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக 2 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியிருக்கிறேன். அணியின் வெற்றிக்காக என்னால் முடிந்த அளவுக்கு பாடுபட்டிருக்கிறேன்.

அணியின் சமீபத்திய செயல்பாடு, எனது மோசமான பார்ம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு எனது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு வீரராக தொடர்ந்து விளையாட என்னை அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x