Published : 03 Apr 2015 10:14 AM
Last Updated : 03 Apr 2015 10:14 AM
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தொழில் நுட்ப கமிட்டி வரும் 7-ம் தேதி அனில் கும்ப்ளே தலைமையில் கொல்கத்தாவில் கூடுகிறது.
ஐபிஎல் தொடக்க விழாவும் அதே தினத்தில்தான் நடைபெறு கிறது. அதற்கு முன்னதாக தொழில் நுட்ப கமிட்டி கூடவுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித் துள்ளன. கடந்த 15-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற ரஞ்சி கேப்டன்கள் மற்றும் பயிற்சி யாளர்கள் கூட்டத்தின்போது முன்வைக்கப்பட்ட கருத்துகள் குறித்து விவாதிப்பதற்காகவே இந்த கூட்டம் கூட்டப்பட்டுள் ளதாகத் தெரிகிறது.
இதில் முக்கிய மாக சயீத் முஷ்டாக் அலி டி20 சாம்பியன்ஷிப் போட்டி குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் போட்டி அட்ட வணையில் மாற்றம் செய்ய வேண்டும், முஷ்டாக் அலி டி20 போட்டியை ஐபிஎல் ஏலத்துக்கு முன்னதாக நடத்தி முடிக்க வேண்டும் என ரஞ்சி கேப்டன்கள் மற்றும் பயிற்சியா ளர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
தற்போது நடைபெற்று வரும் முஷ்டாக் அலி டி20 தொடர், ஐபிஎல் தொடங்குவதற்கு முந்தைய நாள்தான் முடிவுக்கு வருகிறது. பல வீரர்கள் ஐபிஎல் அணிகளில் விளையாடுவதால், அவர்களால் முஷ்டாக் அலி தொடரின் கடைசிக்கட்ட ஆட்டங்களில் விளையாட முடியவில்லை.
உதாரணமாக மும்பை அணியின் கேப்டன் ஆதித்ய தாரே, முன்னணி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், ஆல்ரவுண்டர் அபிஷேக் நய்யார் உள்ளிட்டோர் ஐபிஎல் அணிகளில் இடம்பெற்றிருப்பதால் கட்டாக்கில் நடைபெற்று வரும் மும்பை-பஞ்சாப் இடையிலான ஆட்டத்தில் பங்கேற்க முடியவில்லை.
எனவே உள்ளூர் 50 ஓவர் போட்டி, உள்ளூர் டி20 போட்டி உள்ளிட்டவற்றின் அட்டவணையை மாற்றுவது தொடர்பாக விவாதிக்கப்படும் என தெரிகிறது. இந்த முறை ரஞ்சி போட்டிக்கு முன்னதாக 50 ஓவர் போட்டி நடத்தப்பட்டதால் உலகக் கோப்பை போட்டிக்கான அணியை தேர்வாளர்கள் தேர்வு செய்வதற்கு ஏதுவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT