Published : 16 Apr 2015 09:50 AM
Last Updated : 16 Apr 2015 09:50 AM
உணர்ச்சிவசப்படுவதை கட்டுப் படுத்தி, ஒரு கேப்டனாக முதிர்ச்சி பெறுவது எப்படி என்பதை தோனியிடம் இருந்து விராட் கோலி கற்றுக்கொள்ள வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாஹ் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கேப்டன் தோனி அறிவித்தார். அதைத் தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனானார் கோலி. ஆனால் எளிதில் உணர்ச்சி வசப்படும் குணம் கொண்ட வரான கோலி, உலகக் கோப் பையின்போது பத்திரிகையாளர் ஒருவரிடம் சண்டை போட்டு சர்ச்சையில் சிக்கினார்.
உலகக் கோப்பை அரையிறு தியில் கோலி சரியாக விளை யாடாததற்கு அவருடைய காதலி அனுஷ்கா சர்மாதான் காரணம் என ரசிகர்கள் விமர்சித்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய கோலி, “அனுஷ்காவை திட்டியவர்கள் அதற்காக வெட்கப்பட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு அறிவுரை கூறியுள்ள ஸ்டீவ் வாஹ் மேலும் கூறியிருப்பதாவது: இளம் கேப்டனான கோலி நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அவர் முதிர்ச்சியடைய வேண்டும். உலகக் கோப்பையின்போது அவர் சில சர்ச்சைகளில் சிக்கினார். சில விஷயங்களில் அவர் மிகுந்த கிளர்ச்சியுடையவராகவும், மிகுந்த உணர்ச்சிவசப்படக் கூடியவரா கவும் இருக்கிறார்.
கேப்டன் என்பவர் எந்த விஷயமும் தன்னை பாதிக்காத அளவுக்கு வலுவானராக இருக்க வேண்டும். தோனி அந்த குணாதிசயங்களைக் கொண்டிருந்தார். அதனால் அவரை எதுவும் பாதித்த தில்லை. அவர், கோலிக்கு நல்ல முன்மாதிரியாக இருக்கிறார். கோலி தன்னுடைய குணாதி சயங்களோடே இருக்கட்டும். ஆனால் தோனியிடம் இருந்து சிலவற்றை கற்றுக்கொள்ள வேண்டும்.
ரசிகர்கள் என்ன சொல் கிறார்கள் என்பதைப் பற்றி தோனி ஒருபோதும் கவலைப் பட்டதில்லை. தேவையில்லாத விஷயங்கள் அவரிடம் ஒருபோதும் ஆதிக்கம் செலுத்தியதில்லை. கோலியின் வெறித்தனம் எனக்கு பிடிக்கும். அதற்காக கேப்டனாக இருக்கும்போது எல்லாவற்றுக்கும் சண்டை போட்டுக் கொண்டிருக்க முடியாது.
எனவே அதுபோன்ற விஷயங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் விளையாட்டின் மீதான வெறித்தனத்தை இழந்துவிட வேண்டாம். ஆனால் எல்லா விஷயங்களையும் மென்மை யாக அணுக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT