Last Updated : 22 Apr, 2015 10:03 AM

 

Published : 22 Apr 2015 10:03 AM
Last Updated : 22 Apr 2015 10:03 AM

ராயல் சேலஞ்சர்ஸுக்கு எதிராக ஜாகீர்கான் விளையாடுவார்: உதவிப் பயிற்சியாளர் ஆம்ரே தகவல்

பெங்களூர் ராயல் சேலஞ்சர் ஸுக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்னதாக வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்பிவிடுவார். அவரின் வருகையால் டெல்லி அணி புதிய உத்வேகம் பெறும் என எதிர்பார்ப்பதாக அந்த அணியின் உதவிப் பயிற்சியாளர் பிரவீண் ஆம்ரே தெரிவித்துள்ளார்.

டெல்லி அணியின் பயிற்சி முகாமில் இணைந்ததில் இருந்தே காயம் மற்றும் உடற்தகுதி பிரச்சினையால் போராடிக் கொண்டிருக்கிறார் ஜாகீர்கான். இந்த நிலையில் ஆம்ரே மேலும் கூறியிருப்பதாவது: பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸுக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பு ஜாகீர்கான் உடற்தகுதி பெற்றுவிடுவார் என நம்புகிறோம்.

எனினும் இறுதி முடிவு முடநீக்கியல் நிபுணரைச் சார்ந்ததாகும். இன்று (நேற்று) வலைப் பயிற்சியில் ஜாகீர்கான் பந்துவீசினார். அதனால் அவர் உடற்தகுதி பெற்றுவிடுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தோடு சேர்த்து டெல்லி அணி தனது சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 9 தோல்விகளைச் சந்தித்திருந்தாலும், அதிலிருந்து மீண்டு வரும் என நம்பிக்கைத் தெரிவித்த ஆம்ரே, “டெல்லியில் இன்னும் எங்களுக்கு 3 போட்டிகள் உள்ளன. மற்ற நகரங்களில் நடைபெற்ற இரு போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பது முக்கியமானதாகும்.

மும்பை இண்டியன் ஸுக்கு எதிராக விளையாடவுள்ள அடுத்த ஆட்டம் எங்களுக்கு மிக முக்கியமானதாகும். ஆடுகளம் குறித்து நாம் புகார் செய்ய முடியாது. எப்படிப்பட்ட ஆடுகளமாக இருந்தாலும், நல்லதொரு கிரிக்கெட்டை ஆட வேண்டும். கொல்கத்தாவுக்கு எதிராக 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டதாகக் கருதுகிறேன்.

அதேநேரத்தில் கொல்கத்தா பவுலர்களை பாராட்டியே ஆக வேண்டும். ஏனெனில் அவர்கள் மிகச்சிறப்பாக பந்துவீசினார்கள். முதல் பவர் பிளேயில் 36 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். உமேஷ் யாதவின் பந்துவீச்சு ஆட்டத்தில் திருப்புமுனை என்று சொல்லலாம்.

ஏனெனில் கடைசிக் கட்டத்தில்கூட அவருடைய பந்துவீச்சில் ரன் எடுக்க முடியவில்லை. டெல்லி மைதானத்தில் 170 ரன்கள் எடுத்தி ருந்தால் அது நல்ல ஸ்கோராக இருந்திருக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x