Published : 10 Apr 2015 10:01 AM
Last Updated : 10 Apr 2015 10:01 AM
மும்பைக்கு எதிராக மோர்ன் மோர்கல் ஆட்டநாயகன் விருதைப் பெற்றிருந்தாலும், என்னைப் பொறுத்தவரையில் சூர்ய குமார் யாதவ்தான் ஆட்டநாயகன் என கொல்கத்தா கேப்டன் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்த முக்கியக் காரணமாக இருந்தவர் சூர்ய குமார் யாதவ். அவர் 20 பந்துகளில் 5 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 46 ரன்கள் குவித்தார்.
வெற்றி குறித்துப் பேசிய கவுதம் கம்பீர், “சூர்ய குமார் யாதவ்தான் ஆட்டநாயகன். அவர்தான் ஆட்டத்தின் போக்கை மாற்றினார் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. டாஸ் போடுவதற்கு முன்னதாக சூர்ய குமார் சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்ப்பதாக ரவி சாஸ்திரியிடம் கூறினேன்.
அவர் நல்லதொரு ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக அவருக்கு கூடுதல் பொறுப்பை வழங்க விரும்பி னோம். அதனால் அவரை 4-வது வீரராக களமிறக்கினோம். அவர் சிறப்பாக விளையாடினார் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT