Published : 20 Apr 2015 05:20 PM
Last Updated : 20 Apr 2015 05:20 PM
கெவின் பீட்டர்சன் முன்பு பெரிய பேட்ஸ்மெனாக இருக்கலாம், ஆனால் இப்போது அவர் ஒரு போதும் பெரிய பேட்ஸ்மென் என்று கூறுவதற்கில்லை என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்த ஸ்டீவ் கூறியதாவது:
இங்கிலாந்து எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். நீண்ட நாளைய அனுகூலங்களுக்காக, குறுகிய கால வேதனையை சில நேரங்கள் அனுபவிக்க வேண்டி வரும், பீட்டர்சன் இப்போது பெரிய பேட்ஸ்மென் இல்லை என்றே நினைக்கிறேன்.
அவர் குறித்த பிற விவகாரங்களை ஒதுக்கி விட்டுப் பார்த்தால், அவரது தற்போதைய ஃபார்ம், அணியில் இடம்பெறுவதற்கான தகுதியுடன் இல்லை என்பதே நிஜம்.
அவர் பெரிய வீரராக முன்பு இருந்திருக்கலாம், ஆனால் இப்போது அந்த நிலையில் வைத்து அவரை நான் மதிப்பிட விரும்பவில்லை.
முதலில் நாட்டின் முதல் தரமான 6 வீரர்களில் அவர் இருக்க வேண்டும், ஆனால் அவர் இல்லை. தற்போதைய அணி அமைப்பில் அவர் இடம்பெறுவது சரியா? அவர் அப்படி பொருந்தக்கூடியவர் என்றால் எதிர்காலத்தை நோக்கி இங்கிலாந்து அணி எப்படி அடியெடுத்து வைக்க முடியும்? கேப்டனுடனும் பிற வீரர்களுடனும் அவர் ஒத்துப்போவாரா? எனவே அவர் அணியில் இல்லாமல் போனதற்கான காரணங்கள் உள்ளன.
அவர் ஒரு நபராகவும் ஆளுமையாகவும் நிறைய மாற வேண்டியுள்ளது. அது இனிமேல் கடினமும் கூட. முதலில் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும், இது ஒரு நேரத்தில் நின்று விட்டது என்றால், உண்மையில் பிரச்சினைகள் உள்ளன என்றே பொருள்.” என்றார் ஸ்டீவ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT