Published : 31 Mar 2015 03:09 PM
Last Updated : 31 Mar 2015 03:09 PM
நியூஸிலாந்து அணிக்காக அதிக ஒருநாள் போட்டியில் விளையாடியவரான ஆல்ரவுண்டர் டேனியல் வெட்டோரி ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் ஏற்கெனவே டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து விடைபெற்று விட்ட நிலையில், தற்போது ஒருநாள் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்றிருப்பதால் அவருடைய 18 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: நான் ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான தருணம். உலகக் கோப்பை இறுதி ஆட்டமே எனது கடைசி ஆட்டமாகும். உலகக் கோப்பையை வென்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். கடந்த 6 வாரங்களாக மிகச்சிறப்பாக விளையாடி இறுதிச்சுற்று வரை முன்னேறியதற்காக ஒவ்வொரு நியூஸிலாந்து வீரரையும் நினைத்து பெருமை கொள்கிறேன்.
கேப்டன் பிரென்டன் மெக்கல்லம், பயிற்சியாளர் மைக் ஹெசன் உள்ளிட்ட பலரும் எனக்கு நல்ல ஆதரவு அளித்தனர். அவர்களுக்கு நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன் என்றார்.
1997-ம் ஆண்டு தனது 18-வது வயதில் இலங்கைக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமான வெட்டோரி, நியூஸிலாந்து அணிக் காக அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடியதோடு, அதிக விக்கெட் எடுத்தவர் என்ற பெருமை யையும் பெற்றுள்ளார்.
உலகின் தலைசிறந்த சுழற் பந்து வீச்சாளர்களில் ஒருவரான வெட்டோரி, 295 ஒருநாள் போட்டி களில் விளையாடி 305 விக்கெட்டு களை வீழ்த்தியுள்ளார். இதுதவிர 2,253 ரன்கள் குவித்துள்ளார். உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய நியூஸிலாந்து பவுலர்கள் வரிசையில் ஜேக்கப் ஓரத்துடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். உலகக் கோப்பையில் 32 ஆட்டங்களில் விளையாடியுள்ள வெட்டோரி 36 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த உலகக் கோப்பையில் மட்டும் அவர் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வெட்டோரி 362 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் டுகளை வீழ்த்திய நியூஸிலாந்து வீரர் வெட்டோரி என்பது குறிப்பிடத் தக்கது. சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டியில் 300 விக்கெட்டுகள், 4 ஆயிரம் ரன்கள் எடுத்த 3-வது வீரர் வெட்டோரி ஆவார். கபில்தேவ், இயான் போத்தம் ஆகியோர் மற்ற இருவர்.
ஸ்டீபன் ஃபிளெம்மிங்கிற்குப் பிறகு நியூஸிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற வெட்டோரி, 2011 வரை அந்த பொறுப்பில் இருந்தார். அவருடைய தலைமையில் நியூஸிலாந்து 32 டெஸ்ட் போட்டிகளிலும், 82 ஒருநாள் போட்டிகளிலும் விளை யாடியுள்ளது.
34 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ள வெட்டோரி, 38 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சமீபகாலமாக காயம் காரணமாக பெரும் பாதிப்புக் குள்ளானபோதும், உலகக் கோப் பையில் வெட்டோரி அசத்தலாக பந்துவீசி அனைவரையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT