Published : 16 Apr 2015 09:53 AM
Last Updated : 16 Apr 2015 09:53 AM

ராஜஸ்தானின் வெற்றி தொடருமா?- சன்ரைஸர்ஸுடன் இன்று மோதல்

விசாகப்பட்டினத்தில் இன்று நடை பெறும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸும், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்தும் மோதுகின்றன.

தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ், தனது வெற்றியைத் தொடரும் முனைப்பில் களமிறங்கு கிறது. வார்னர் தலைமையிலான சன்ரைஸர்ஸ் அணி 2-ல் விளையாடி ஓன்றில் வெற்றி பெற்றிருந்தாலும், பெங்களூரை வீழ்த்திய பிறகு மிகுந்த நம்பிக்கையைப் பெற்றி ருக்கிறது. மேலும் தனது 2-வது ‘ஹோம் கிரவுண்ட்’டில் விளை யாடும் சன்ரைஸர்ஸை அவ்வளவு எளிதாக வீழ்த்திவிட முடியாது.

ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஷேன் வாட்சன் இன்னும் காயத்தி லிருந்து மீளவில்லை. அதனால் இந்த ஆட்டத்திலும் ஸ்மித் தலைமை யிலேயே அந்த அணி களமிறங் கவுள்ளது. இதுவரை 3 ஆட்டங் களில் விளையாடி 122 ரன்கள் குவித்து இந்த ஐபிஎல் போட்டியில் அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஸ்மித், அந்த அணியின் மிகப்பெரிய பலமாகத் திகழ்கிறார்.

அஜிங்க்ய ரஹானே, தீபக் ஹூடா, ஜேம்ஸ் ஃபாக்னர், ஸ்டூவர்ட் பின்னி என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது ராஜஸ்தான். தொடர்ந்து அசத்த லாக ஆடி வரும் இளம் வீரரான தீபக் ஹூடா, இந்த ஆட்டத்திலும் ரசிகர்களை சிக்ஸர் மழையில் நனைய வைப்பார் என நம்பலாம்.

பந்துவீச்சைப் பொறுத்த வரையில் கிறிஸ் மோரிஸ், டிம் சவுதி, தவல் குல்கர்னி, ஸ்டூவர்ட் பின்னி, ஜேம்ஸ் ஃபாக்னர், பிரவீண் டாம்பே ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். 7 பவுலர்கள் இருப்பதால் சூழலுக்கு ஏற்றவாறு அவர்களை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு ஸ்மித்துக்கு கிடைத்திருக்கிறது.

சன்ரைஸர்ஸ் அணியின் பேட்டிங்கில் கேப்டன் வார்னர், ஷிகர் தவன் ஆகியோர் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இருவருமே நல்ல பார்மில் உள்ளது கூடுதல் பலமாகும். இவர்கள் சிறப்பான தொடக்கம் ஏற்படுத்தும்பட்சத்தில் அந்த அணி நல்ல ஸ்கோரை குவிக்க முடியும். மிடில் ஆர்டரில் கேன் வில்லியம்சன், லோகேஷ் ராகுல், நமன் ஓஜா, ரவி போபாரா, ஆசிஷ் ரெட்டி ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

பந்துவீச்சைப் பொறுத்த வரையில் டிரென்ட் போல்ட், புவனேஸ்வர் குமார் ஆகியோர் அந்த அணியின் துருப்பு சீட்டாக உள்ளனர். இவர்கள் தவிர பிரவீண் குமார், போபாரா, கரண் சர்மா, ஆசிஷ் ரெட்டி ஆகியோரும் பந்துவீச்சில் பலம் சேர்க்கின்றனர்.

போட்டி நேரம்: இரவு 8

நேரடி ஒளிபரப்பு: சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ்

இதுவரை

இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை மோதியுள்ளன. அதில் சன்ரைஸர்ஸ் 2 முறையும், ராஜஸ்தான் 3 முறையும் வெற்றி கண்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x