Last Updated : 07 Apr, 2015 09:52 AM

 

Published : 07 Apr 2015 09:52 AM
Last Updated : 07 Apr 2015 09:52 AM

சிங்கப்பூர் ஓபனில் இருந்து சாய்னா விலகல்: முதலிடத்தை இழந்ததால் வருத்தமில்லை என அறிவிப்பு

இந்த வாரம் தொடங்கும் சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக இந்திய பாட்மிண்டன் நட்சத்திரம் சாய்னா நெவால் அறிவித்துள்ளார்.

சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் முதலிடத்தை இழந்ததால் வருத்தமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் இண்டியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்து சாய்னா சாதனை படைத்தார்.

ஆனால் கடந்த வாரம் மலேசியா ஓபன் போட்டி அரையிறுதியில் சீன வீராங்கனை லீ ஸியூரியிடம் தோல்வியடைந்தார். இதன் மூலம் தரவரிசையில் முதலிடத்தையும் இழந்தார்.

எனினும் இந்த வாரம் தொடங்கும் சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ் போட்டியில் வெற்றி பெற்றால் மீண்டும் முதலிடத்தைப் பிடிக்கலாம் என்ற வாய்ப்பு சாய்னாவுக்கு இருந்தது.

ஆனால் அப்போட்டியில் இருந்து விலகுவதாக சாய்னா அறிவித்துள்ளார். இதன் மூலம் அவர் மீண்டும் முதலிடம் பெறுவதற்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துவிட்டது.

இது தொடர்பாக அவர் கூறியுள்ளது. கடந்த மாதம் மிகவும் கடுமையான போட்டிகள் நிறைந்ததாக அமைந்தது. மூன்று முக்கிய போட்டிகளில் பங்கேற்று இரண்டில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளேன். எனவே தொடர்ந்து மிகவும் கடுமையாக விளையாடி அதிகம் களைப்படைய வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். எனவே சிங்கப்பூர் ஓபன் போட்டியை தவிர்த்து விட்டது. இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன். தரவரிசையில் முதலிடத்தை இழந்தது குறித்து எந்த வருத்தமும் இல்லை என்றார்.

மற்றொரு முன்னணி இளம் வீராங்கனை பி.வி. சிந்துவும் சிங்கப்பூர் ஓபன் போட்டியில் விளையாடவில்லை. காயம் காரணமாக அவர் விலகியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x