Last Updated : 01 Apr, 2015 03:37 PM

 

Published : 01 Apr 2015 03:37 PM
Last Updated : 01 Apr 2015 03:37 PM

மோசமான உலகக் கோப்பை லெவன் அணியை அறிவித்து நியூஸி. இணையதளம் வேடிக்கை

உலகக் கோப்பை போட்டிகள் முடிந்த பிறகு பிரெண்டன் மெக்கல்லம் தலைமையில் ஐசிசி ஒரு சிறந்த உலகக் கோப்பை அணியை அறிவிக்க நியூசிலாந்து இணையதளம் ஒன்று மோசமான உலகக் கோப்பை அணி ஒன்றை அறிவித்துள்ளது.

இந்த அணிக்குத் தலைவர் இயன் மோர்கன் என்று அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. 'Not First XI' என்ற பெயரில் நியூசி. இணையதளம் ஒன்று இந்த அணியை அறிவித்துள்ளது.

இந்த அணிக்கு முதல் சுற்றில் வெளியேறிய இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கனை கேப்டனாக அறிவித்து உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சரியாக செயல்படாத வீரர்கள் கொண்ட அணியை வேடிக்கையாக அறிவித்துள்ளது.

இது குறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள விவரம் வருமாறு:

டிவைன் ஸ்மித் - தொடக்க வீரர் - மே.இ.தீவுகள் (உ.கோப்பையில் எடுத்த ரன்கள் 93, சராசரி 15.5)

குவிண்டன் டி காக் - தொடக்க வீரர் - தெ.ஆ. (145 ரன்கள், சராசரி 20.71)

கேரி பேலன்ஸ் - இங்கிலாந்து - (36 ரன்கள், சராசரி 9)

கிருஷ்ண சந்திரன் - யு.ஏ.இ. - (38 ரன்கள், சராசரி 7.6)

இயன் மோர்கன் - கேப்டன் இங்கிலாந்து - (90 ரன்கள், சராசரி 18)

ஷாகித் அஃப்ரீடி - பாகிஸ்தான் - (116 ரன்கள், சராசரி 23.2; 2 விக்கெட்டுகள்)

லுக் ரோன்க்கி - வி.கீ. நியூசிலாந்து - (73 ரன்கள், சராசரி 12.16)

கெவின் ஓ பிரையன் - அயர்லாந்து - (408 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள்)

ஸ்டூவர்ட் பிராட் - இங்கிலாந்து - (4 விக்கெட்டுகள், சராசரி 63.50)

மிட்செல் மெக்லினாகன் - நியூசிலாந்து - (0/68)

கிமார் ரோச் - மே.இ.தீவுகள் - (1 விக்கெட் 150 ரன்கள் கொடுத்து)

பயிற்சியாளர்: பீட்டர் மோர்ஸ் - இங்கிலாந்து

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x