Published : 21 Apr 2015 10:11 AM
Last Updated : 21 Apr 2015 10:11 AM
இந்திய-ஜப்பான் அணிகளுக்கு இடையிலான ஹாக்கித் தொடர் வரும் மே 3-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை புவனேசுவரத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக 25 பேர் கொண்ட உத்தேச அணியை அறிவித்துள்ளது ஹாக்கி இந்தியா.
இந்திய அணியின் பயிற்சி முகாம் டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய மைதானத்தில் நாளை தொடங்குகிறது. 30-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த முகாமின் முடிவில் ஜப்பானுடன் விளையாடவுள்ள இறுதி அணி தேர்வு செய்யப்படும்.
பயிற்சி முகாம் குறித்துப் பேசிய தலைமைப் பயிற்சியாளர் பால் வான் ஆஸ், “இந்திய அணி நல்ல நிலையில் உள்ளது. கடந்த ஓர் ஆண்டாக இந்திய வீரர்கள் மிகுந்த நம்பிக்கையோடு உள்ளனர். கடந்த போட்டிகளில் முக்கியமான கட்டங்களில் சிறப்பாக ஆடி வந்திருக்கின்றனர்” என்றார்.
உலக ஹாக்கி லீக் போட்டியின் அரையிறுதி வரும் ஜூனில் நடைபெறவுள்ளது. அதற்கு தயாராகும் வகையில் ஜப்பானுடன் விளையாடவுள்ளது இந்தியா.
அணி விவரம்:
கோல் கீப்பர்கள்: ஸ்ரீஜேஷ், ஹர்ஜோத் சிங். பின்களம்: குர்பஜ் சிங், ரூபிந்தர் பால் சிங், பைரேந்திர லகரா, கோதாஜித் சிங், வி.ஆர்.ரகுநாத், ஜேஸ்ஜித் சிங், குருமெயில் சிங், குருஜிந்திர் சிங், ஹர்மான்ப்ரீத் சிங். நடுகளம்: மன்பிரீத் சிங், தரம்வீர் சிங், சர்தார் சிங், எஸ்.கே.உத்தப்பா, சிங்லென்சனா சிங், பர்தீப் மோர். முன்களம்: எஸ்.வி.சுனில், ரமன்தீப் சிங், ஆகாஷ்தீப் சிங், மன்தீப் சிங், நிகின் திம்மையா, சத்பிர் சிங், டேனிஸ் முஜ்தபா, லலித் உபாத்யாய்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT