Published : 08 Apr 2015 09:48 AM
Last Updated : 08 Apr 2015 09:48 AM
ஐபிஎல் வரலாற்றில் படைக்கப்பட்ட சாதனைகளில் சில…
# ஐபிஎல் போட்டியின் தொடக்கம் முதல் தற்போது வரை கேப்டனாக இருக்கும் ஒரே நபர் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனிதான். அதிலும் அவர் தொடர்ந்து ஒரே அணிக்காக கேப்டனாக இருந்து வருகிறார். இதுவரை 112 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார். மொத்தத்தில் சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, சூப்பர் கிங்தான்.
# அதிக வெற்றிகளைக் குவித்த அணி என்ற பெருமை இன்றும் சென்னை அணியின் வசமே உள்ளது. அந்த அணி 69 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளது.
# அதிக தோல்வியைப் பதிவு செய்த அணிகள் வரிசையில் டெல்லி அணி (59) முதலிடத்தில் உள்ளது.
# ஓர் அணியின் அதிகபட்ச ஸ்கோர்: பெங்களூர்-263/5 (புனேவுக்கு எதிராக, 2013).
# ஓர் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்: ராஜஸ்தான்-58 (பெங்களூருக்கு எதிராக 2009)
# அதிக சிக்ஸர்களை விளாசியவர் என்ற பெருமையை கெயில் தக்கவைத்துக் கொண்டுள்ளார். கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிக்காக 68 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 192 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.
# இதுவரை 31 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன.
# கிறிஸ் கெயில் 4 சதங்களுடன் அதிக சதமடித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
# தனிநபர் அதிகபட்சம்: கிறிஸ் கெயில் (பெங்களூர்) 175* (புனேவுக்கு எதிராக 2013).
# அதிக முறை டக்அவுட்டானவர்கள் கவுதம் கம்பீர், அமித் மிஸ்ரா. இருவரும் தலா 10 முறை டக்அவுட் ஆகியுள்ளனர்.
# அதிக விக்கெட் எடுத்தவர்களில் மும்பை வீரர் லசித் மலிங்கா முதலிடத்தில் இருக்கிறார். இதுவரை 83 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர், 119 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.
# 13 முறை ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. அதிலும் அமித் மிஸ்ரா 3 முறை ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார். டெக்கான் சார்ஜர்ஸ், டெல்லி, சன்ரைஸர்ஸ் அணிகளுக்காக விளையாடியபோது தலா ஒரு முறை ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT