Last Updated : 16 Apr, 2015 10:00 AM

 

Published : 16 Apr 2015 10:00 AM
Last Updated : 16 Apr 2015 10:00 AM

ஒருநாள் தரவரிசை: 2-வது இடத்தில் இந்தியா

ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி 116 புள்ளிகளுடன் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலிய அணி 122 புள்ளி களுடன் தொடர்ந்து முதலிடத் திலும், தென் ஆப்பிரிக்கா 112 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், இலங்கை 108 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளன.

நியூஸிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் முறையே 5, 6 மற்றும் 7-வது இடங்களில் உள்ளன.

வரும் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பாகிஸ்தான் 0-3 என்ற கணக்கில் தோற்குமானால் 7-வது இடத்தை இழக்கும்.

மேற்கிந்தியத் தீவுகள் 7-வது இடத்தைப் பிடிக்கும். ஒருவேளை வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் வெல்லுமானால் இங்கிலாந்தை பின்னுக்குத்தள்ளி 6-வது இடத் தைப் பிடிக்கும்.

பேட்ஸ்மேன்கள் தரவரிசை யில் இந்தியாவின் கோலி, ஷிகர் தவன், கேப்டன் தோனி ஆகி யோர் முதல் 10 இடங்களில் உள்ளனர். விராட் கோலி தொடர்ந்து 4-வது இடத்திலும், தவன் 6-வது இடத்திலும், தோனி 8-வது இடத்திலும் உள்ளனர். தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் முதல் இடத்தில் உள்ளார்.

பவுலர்கள் தரவரிசையில் இந்தியர் யாரும் முதல் 10 இடங் களில் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x