Published : 05 Mar 2015 03:55 PM
Last Updated : 05 Mar 2015 03:55 PM
சரியாக விளையாட முடியாமல் போன ஷேன் வாட்சனை ஆஸ்திரேலியா அன்று ஆப்கன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் உட்கார வைத்தது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு வாட்சனை ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டிகளில் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தனது நீக்கத்துக்குக் தானே காரணம் என்கிறார் ஷேன் வாட்சன். கடந்த 18 மாதங்களாக நம்பர் 3 நிலையில் வாட்சன் களமிறங்கினார். ஆனால், ஸ்டீவ் ஸ்மித் நேற்று ஆப்கன் அணிக்கு எதிராக இந்த நிலையில் களமிறங்கி ரன்களைக் குவிக்க இனி ஷேன் வாட்சனின் எதிர்காலம் ஒருநாள் போட்டிகளப் பொருத்தவரை கடினமே.
"எனக்கு நிறைய வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. நான் ரன்களை எடுக்கவில்லை. அணியிலிருந்து நீக்கப்படுவது என்பது எப்போதும் ஏமாற்றமளிக்கக் கூடியதே. அணித்தேர்வுக்குழுவினர் என்னிடம் பேசினர். நான் போதுமான ரன்களை எடுக்கவில்லை. என் மீதுதான் இதற்கான முழு காரணமும் உள்ளது. நான் என்னையே குறைகூறிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை, காரணம் நிறைய வாய்ப்புகள் எனக்கு அளிக்கப்பட்டது. நான் ரன்கள் எடுக்கவில்லை.
எனவே ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் அப்போது அதனை பயன்படுத்திக் கொள்வேன். இப்போதைய நிலைக்கு நானே காரணம்.” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT