Published : 05 Mar 2015 04:26 PM
Last Updated : 05 Mar 2015 04:26 PM
கிறிஸ் கெய்ல் போன்ற அதிரடி வீரர்களுக்கு சவால் அளிப்பது தனக்கு மிகவும் பிடித்தமான விஷயம் என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
"கிறிஸ் கெய்ல் மட்டுமல்ல, உலகில் எந்த ஒரு அதிரடி வீரராக இருந்தாலும் சரி, நான் விக்கெட்டுகளை வீழ்த்தவே எப்போதும் கவனம் செலுத்துவேன். அதுவும் அபாயகரமான பேட்ஸ்மென் என்பவர்களது விக்கெட்டை வீழ்த்துவது எனக்கு மிகவும் பிடிக்கும்.
களத்தில் புகுந்து அந்த குறிப்பிட்ட ஆட்டத்தில் எந்த விதத்தில் தாக்கம் செலுத்த முடியும் என்பதையே நான் எப்போதும் பார்ப்பேன். கிறிஸ் கெய்லாயினும் டிவில்லியர்ஸ் ஆயினும் இவர்களை வீழ்த்துவதே எனக்கு இடப்பட்ட பணி. இவர்களை வீழ்த்தி விட்டால், ஆட்டத்தில் பாதைகள் நம் பக்கம் தெளிவாகிவிடும்.” என்றார்.
இதுவரை 3 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை அஸ்வின் கைப்பற்றியுள்ளார். அனைத்தையும் விட அவரது பந்துவீச்சில் புதுப்பொலிவு கூடியுள்ளது. பந்தின் தையலை அவர் பிடிக்கும் விதம் தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது.
“விக்கெட்டுகளை ஒவ்வொரு போட்டியிலும் கைப்பற்றியது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு பவுலராக எனது பயணம் கற்றலின் பாதையாகவே அமைந்துள்ளது. இப்போது நன்றாக வீசுகிறேன் என்று தெரியும் போது, கற்றலை இன்னும் சிறப்புறச் செய்கிறேன் என்பதுதான் அர்த்தமே தவிர நான் ஆகச்சிறப்பாக வீசுகிறேன் என்பதல்ல.
கற்றுக் கொள்வதற்கு திறந்த மனதுடன் இருந்தால் உச்சத்தை அடையலாம்.
நாளையும் திட்டங்களை சரியாக செயல்படுத்துவோம். ஒவ்வொரு ஆட்டத்தையுமே நாக்-அவுட் ஆட்டமாகவே பார்க்கிறோம்.
புதிய பந்தில் தொடகக்த்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவது மிகப்பெரிய சவுகரியத்தை அளிக்கிறது. ஒரு ஸ்பின்னர் அதன் பிறகு வீச வரும்போது கொஞ்சம் சுதந்திரமாக வீச முடிகிறது.” என்றார் அஸ்வின்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT