Published : 23 Mar 2015 06:10 PM
Last Updated : 23 Mar 2015 06:10 PM
ரெய்னாவின் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு எதிரான பிரச்சினைகளை பெரிதுபடுத்த வேண்டாம் என்று தோனி கூறினாலும் அந்தப் பிரச்சினையைக் களைய அவர் ரெய்னாவுக்கு தனது டென்னிஸ் சர்வ்கள் மூலம் உதவி புரிந்துள்ளார்.
டென்னிஸ் பந்தை ஈரத்தில் நனைத்து சிமெண்ட் தரையில் த்ரோ செய்ய வைத்து பேட்ஸ்மென்கள் பவுன்ஸரை எதிர்கொள்ள பயிற்சி மேற்கொள்வது அந்தக் காலம் என்றாகிவிட்டது.
தற்போது நல்ல புல்தரையில் டென்னிஸ் மட்டையைக் கொண்டு டென்னிஸ் பந்தில் சர்வ் அடித்து அதனை பேட்ஸ்மெனை எதிர்கொள்ளச் செய்வதே ஷார்ட் பிட்ச் பந்துகளை எதிர்கொள்ள பயிற்சி முறையாக உள்ளது.
அந்த வகையில் ரெய்னாவுக்கு முதலில் பயிற்சியாளர் டன்கன் பிளெட்சர் டென்னிஸ் சர்வ்களைச் செய்தார். அதில் சிலவற்றை ஹூக், புல் ஆடினார். ரெய்னா, சில ஷாட்கள் நன்றாக மாட்டியதாகவும், சில ஷாட்கள் சரியாகச் சிக்கவில்லை என்றும் ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
டன்கன் பிளெட்சரின் சர்வ்கள் வலுவிழந்ததையடுத்து கேப்டன் தோனி டென்னிஸ் மட்டையைக் கொண்டு சர்வ்களை அடிக்கத் தொடங்கினார் ரெய்னா அதனை எதிர்கொண்டார். தோனி அடித்த வலுவான டென்னிஸ் சர்வ் ஷாட்களை எதிர்கொள்ள ரெய்னா திணறினார். அவர் சவுகரியமாகவே ஆடவில்லை.
ஒரு நேரத்தில் சர்வ் செய்வதை நிறுத்திய தோனி, ரெய்னாவை அழைத்து சில வார்த்தைகள் பேசினார். 45 நிமிடங்கள் ரெய்னாவுக்கு டென்னிஸ் சர்வ் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. ஷிகர் தவனும் இவ்வாறு பயிற்சி மேற்கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT