Published : 03 Mar 2015 02:47 PM
Last Updated : 03 Mar 2015 02:47 PM
நியூசி. அணிக்கு எதிரான தோல்வியை அடுத்து ‘சரியான திட்டமிடுதல்’ இல்லை என்று மைக்கேல் கிளார்க் கூறினார், இதனால் அவருக்கும் பயிற்சியாளர் டேரன் லீ மேனுக்கும் மோதல் என்ற செய்திகள் உலா வரத்தொடங்கின.
அந்தச் செய்திகளை ஒரு அலட்சிய தோள்குலுக்கல் மூலம் நிராகரித்த மைக்கேல் கிளார்க், செய்தியாளர்களை நோக்கி, “உங்களுக்கு என்னிடமிருந்து தலைப்புச் செய்தி கிடைக்காது.’ என்றார்.
நாளை ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து பெர்த்தில் ஆஸ்திரேலியா விளையாடுகிறது, இந்தப் போட்டி குறித்து கூறிய மைக்கேல் கிளார்க், “இந்தப் போட்டிக்காக நாங்கள் நல்ல பயிற்சி எடுத்துக் கொண்டு தயாரிப்பில் ஈடுபட்டோம். உங்களுக்கு என்னிடமிருந்து தலைப்புச் செய்தி கிடைக்காது.
டேரன் லீ மேன் எங்களிடம் தெளிவாக என்ன எதிர்பார்க்கிறார் என்பதை கூறிவிட்டார். இலங்கைக்கு எதிராக ஞாயிற்றுக் கிழமை சிட்னியில் நடைபெறும் போட்டி குறித்து நாளைய ஆப்கன் போட்டி முடிந்த பிறகு அக்கறை செலுத்தலாம் என்பதையும் அவர் எங்களுக்குத் தெளிவுபடுத்தினார்.
வலைப்பயிற்சியில் ஸ்டீவ் ஸ்மித்திற்கு லேசான காயம் ஏற்பட்டது. ஆனால், அவர் மீண்டும் பேட் செய்தார். அதனால் அவருக்கு ஒன்றும் இல்லை.
நான் இப்போதுதான் தேர்வாளர் ராட்னி மார்ஷிடம் பேசிவிட்டு வந்தேன், ஆடும் 11 வீரர்களைத் தேர்வு செய்வதற்கு முன்பாக அனைவரது தயாரிப்புகள் பற்றி அவர் என்னிடம் கேட்டறிந்தார்.
ஆப்கானிஸ்தான் அணி தாங்கள் ஒரு நல்ல அணி, இந்த மட்டத்தில் சிறப்பாக விளையாட முடியும் என்பதை உலகிற்குக் காட்டியுள்ளனர். கிரிக்கெட் ஆட்டத்திற்கு இது நல்லது. அதிக அணிகள் கிரிக்கெட் தொடர்களில் இடம்பெறுவது கிரிக்கெட்டை வளமடையச் செய்யும் என்பதில் எனக்கு அதீத நம்பிக்கை உண்டு.” என்றார் கிளார்க்.
வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட், கமின்ஸுக்கு பதிலாக இடம்பெறலாம் என்று தெரிகிறது. அதே போல் ஷேன் வாட்சன் அல்லது மிட்சல் மார்ஷ்க்கு பதிலாக ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் பாக்னர் அணியில் இடம்பெறலாம் என்று தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT