Published : 30 Mar 2015 02:50 PM
Last Updated : 30 Mar 2015 02:50 PM
உலகக் கோப்பை கிரிக்கெட் முடிந்ததையடுத்து ஐசிசி சிறந்த அணி ஒன்றை அறிவித்துள்ளது ஐசிசி. அதில் ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை.
உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா நேற்று மெல்போர்னில் ஆஸ்திரேலிய வெற்றியுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து ஐசிசி, உலகக் கோப்பை அணி ஒன்றை பிரெண்டன் மெக்கல்லம் தலைமையில் அறிவித்துள்ளது இந்த அணியில் ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை.
அணி வருமாறு:
மார்டின் கப்தில், பிரெண்டன் மெக்கல்லம் (கேப்டன்), குமார் சங்கக்காரா (விக்கெட் கீப்பர்), ஸ்டீவன் ஸ்மித், ஏ.பி.டிவில்லியர்ஸ், கிளென் மேக்ஸ்வெல், கோரி ஆண்டர்சன், டேனியல் வெட்டோரி, மிட்செல் ஸ்டார்க், டிரெண்ட் போல்ட், மோர்னி மோர்கெல், பிரெண்டன் டெய்லர் (12-வது வீரர்).
இந்த அணியை தேர்வு செய்த ஐசிசி குழு, “இதுதான் ஒரு சமநிலையான அணி, இந்த அணி எந்த அணியையும் ஒரு வீழ்த்த கூடியதாகும்.” என்று கூறியுள்ளது.
ஐசிசி அறிக்கையில் மேலும் இது குறித்து கூறப்படுவதாவது: தனது ஆக்ரோஷமான, புதுவகை மற்றும் உத்வேகத் தலைமைத்துவத்தினால் 44 நாட்கள் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்தை இறுதிக்கு அழைத்து வந்த மெக்கல்லம் கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டார்” என்று ஐசிசி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்கல்லம் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 328 ரன்களை 188.50 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார்.
ஐசிசி பொது மேலாளர் ஜெஃப் அல்லர்டைஸ் இந்த அணித்தேர்வுக் குழுவின் தலைவர் ஆவார், இவர் கூறும் போது, “இந்திய வீச்சாளர்களான உமேஷ் யாதவ், மொகமது ஷமி, மற்றும் அஸ்வின் ஆகியோர் பெயர்களும் பரிசீலனை செய்யப்பட்டது.
இந்த தொடரில் 2 இரட்டைச் சதங்கள், 38 சதங்கள், 2 ஹேட்ரிக், 28 முறை 4 விக்கெட்டுகள், என்று வீரர்கள் பலர் பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இதில் 12 சிறந்த வீரர்க்ளை தேர்வு செய்வது மிகவும் கடினமாக இருந்தது.
மேலும் சில வீரர்கள் பெயரும் பரிசீலிக்கப்பட்டுள்ளன, உதாரணமாக வங்கதேசத்தின் மஹமுதுல்லா, யு.ஏ.இ.யின் ஷைமன் அன்வர், உமேஷ் யாதவ், ஷமி, வஹாப் ரியாஸ், இம்ரான் தாஹிர், அஸ்வின் ஆகியோர் பெயர்களும் எங்களால் பரிசீலிக்கப்பட்டன.
ஆனால் இந்த அணிதான் நல்ல சமநிலையான அணியாக அமைந்துள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT