Last Updated : 12 Mar, 2015 06:33 PM

 

Published : 12 Mar 2015 06:33 PM
Last Updated : 12 Mar 2015 06:33 PM

அஸ்வினுக்கு உதவிய முரளிதரன், ராகுல் திராவிட்

நடப்பு உலகக்கோப்பை போட்டிகளில் சிறப்பாக வீசி வரும் அஸ்வின் பந்துவீச்சு எழுச்சியின் பின்னணியில் முரளிதரன், ராகுல் திராவிட் இருப்பதாக அஸ்வின் பயிற்சியாளர் சுனில் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

அஸ்வின் பந்துவீச்சில் பெரிய மாற்றம் என்னவெனில் பந்துகளை நிறைய காற்றில் தூக்கி வீசுவதும், துல்லியமான ஆஃப் ஸ்டம்ப் திசையும், லெந்த்தும், பந்தின் வேகமாற்றமும் ஆகும்.

2013-14 கிரிக்கெட் தொடர்களில் அஸ்வின் தனது பந்துவீச்சு முறையில் ஏகப்பட்ட பரிசோதனைகளைச் செய்தார். ஒவ்வொரு பந்தையும் ஒவ்வொரு விதமாக வீசி தனக்குத்தானே சிக்கல்களை உருவாக்கிக் கொண்டதாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. அயல்நாட்டு தொடர்களிலும் இவரது பரிசோதனை முயற்சிகள் தொடர விக்கெட்டுகள் என்பது அஸ்வினுக்கு நெடுந்தொலைவாக இருந்தது. முன்னாள் ஸ்பின்னர்களான மணீந்தர் சிங், பிரசன்னா உள்ளிட்டோர் அஸ்வின் செய்யும் தவறுகள் பற்றி சுட்டிக்காட்டிய படியே இருந்தனர்.

இந்நிலையில் அஸ்வினின் நீண்டகால பயிற்சியாளரும், முன்னாள் தமிழ் நாடு ரஞ்சி அணியின் ஸ்பின்னருமான சுனில் சுப்ரமணியம் கூறும் போது, “இந்தியா-இங்கிலாந்து தொடரின் போது ராகுல் திராவிட் மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோருடன் அஸ்வின் நீண்ட உரையாடலில் ஈடுபட்டார்.

அப்போது முரளிதரன், அஸ்வினிடம் 'எப்போதும் வீசும் திசையில் பரிசோதனை செய்து மாற்றிக் கொண்டேயிருந்தால் விரும்பியதை செயல் படுத்த முடியாது, திசை மற்றும் அளவில் எப்போதும் சீரான அணுகுமுறை தேவை’ என்று கூறியுள்ளார்.

அதன் பிறகு அஸ்வின் என்னிடம் கூறிய போது, ஒரே இடத்தில் சீராக வீசுவதில்தான் இனி கவனம் செலுத்தப்போகிறேன் என்றார்.

பெரிய தொடர்களில் சிறப்பாக வீசுவதே ஒரு பவுலரின் திறமைக்கு எடுத்துக்காட்டு, அஸ்வின் ஒவ்வொரு சமயத்திலும் இதனை வெளிப்படுத்தி வருகிறார்.” என்றார் சுனில் சுப்ரமணியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x