Published : 07 Mar 2015 10:55 AM
Last Updated : 07 Mar 2015 10:55 AM
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 28-வது லீக் ஆட்டத் தில் 4 விக்கெட்டுகள் வித்தி யாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை தோற்கடித்தது.
இதன்மூலம், விளையாடிய 4 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ள இந்தியா, 8 புள்ளிகளுடன் காலிறுதியை உறுதி செய்தது. பி பிரிவில் இருந்து காலிறுதிக்கு முன்னேறிய முதல் அணி இந்தியாதான். இதுதவிர உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 8 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த உலகக் கோப்பையில் வென்ற 4 ஆட்டங்களையும் சேர்த்து கணக்கிடப்பட்டுள்ளது.
உலகக் கோப்பையில் இந்தியா தொடர்ச்சியாக 8 வெற்றிகளைப் பதிவு செய்திருப்பது 2-வது முறையாகும். இதற்கு முன்னர் 2003 உலகக் கோப்பையில் இந்தியா தொடர்ச்சியாக 8 வெற்றிகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்கிறது தோனியின் சாதனை
மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியதன் மூலம் வெளிநாட்டு மண்ணில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு அதிக வெற்றிகளை தேடித்தந்த கேப்டன் என்ற சாதனையைப் படைத்தார் தோனி. அவர் தலைமையில் இந்திய அணி 59 வெற்றிகளைப் பெற்றுள்ளது.
முன்னதாக கங்குலி தலைமையிலான இந்திய அணி 58 வெற்றிகளைப் பெற்றதே சாதனையாக இருந்தது. இப்போது அதை முறியடித்துள்ளார் தோனி.
சில முக்கியப் புள்ளிவிவரங்கள்:
இந்தியாவுக்கு எதிராக முதல் 5 ஓவர்களில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தது மேற்கிந்தியத் தீவுகள். இதன்மூலம் 2001-க்குப் பிறகு இந்தியாவுக்கு எதிராக முதல் 5 ஓவர்களில் மோசமான ஸ்கோரைப் பதிவு செய்துள்ளது.
நேற்று 35 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது மேற்கிந்தியத் தீவுகள். அந்த அணி இந்தியாவுக்கு எதிராக 50 ரன்கள் அல்லது அதற்கு குறைவாக எடுத்திருக்கும்போது 4 விக்கெட்டுகளை இழப்பது 10-வது முறையாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 14 முறை 50 ரன்களை எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது மேற்கிந்தியத் தீவுகள்.
உலகக் கோப்பையில் 5 முறை மேற்கிந்தியத் தீவுகளை ஆல்அவுட்டாக்கியுள்ளது இந்தியா. உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராகவே அதிகமுறை ஆல்அவுட்டாகியுள்ளது மேற்கிந்தியத் தீவுகள்.
நேற்று முதல் 5 ஓவர்களில் இந்தியா 12 ரன்கள் மட்டுமே எடுத்தது. இது 2001-லிருந்து தற்போது வரையிலான காலத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் 5 ஓவர்களில் இந்தியா எடுத்த 2-வது குறைந்தபட்ச ஸ்கோர். 2-வதாக பேட் செய்தபோது இந்தியா எடுத்த குறைந்தபட்ச ஸ்கோரும் இதுதான்.
இந்திய அணி 9 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ச்சியாக 4 போட்டிகளில் எதிரணிகளை ஆல்அவுட்டாக்கியுள்ளது.
உலகக் கோப்பையில் கடைசியாக விளையாடிய 3 முறையும் (1996, 2011, 2015) மேற்கிந்தியத் தீவுகளை தோற்கடித்துள்ளது இந்தியா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT