Published : 22 Apr 2014 10:48 AM
Last Updated : 22 Apr 2014 10:48 AM
பெட் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு செக். குடியரசு முன்னேறியுள்ளது. நடப்பு சாம்பியனான இத்தாலியை 4-0 என்ற கணக்கில் செக். குடியரசு வென்றது.
மகளிர் மட்டுமே விளையாடும் 8 நாடுகள் பங்கேற்கும் பெட் கோப்பை போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி செக். குடியரசு நாடுகள் மோதின.
செக். குடியரசின் ஒஸ்ட்ராவா நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உலகின் 6-வது நிலை வீராங்கனையும், முன்னாள் விம்பிள்டன் சாம்பியனுமான செக். குடியரசின் பெட்ரா விட்டோவா, தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள ராபர்ட்டா வின்ஸியை 6-3, 7-5 என்ற சேர் செட்களில் வென்று தங்கள் நாட்டுக்கு 3-0 என்ற முன்னிலையைப் பெற்றுத்தந்தார்.
இரட்டையர் பிரிவில் செக்.குடியரசின் கிளாரா கோவ்கலோவா, ஆண்ட்ரூ ஹால்வகோவா ஆகியோர் வெற்றி பெற்று 4 புள்ளிகளை பெற்றுத் தந்தனர். இதன் மூலம் 4-0 என்ற கணக்கில் செக்.குடியரசு அரையிறுதிக்கு முன்னேறியது. முன்னதாக மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஜெர்மனி இறுதி ஆட்டத்துக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுள்ளது.
செக். குடியரசு ஜெர்மனி இடையிலான இறுதி ஆட்டம் இந்த ஆண்டு நவம்பர் 8,9-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT