Published : 04 Mar 2015 10:18 AM
Last Updated : 04 Mar 2015 10:18 AM
3
தென் ஆப்பிரிக்கா-அயர்லாந்து இடையிலான ஆட்டத்தில் 3 முறை டி.ஆர்.எஸ். முறை (நடுவரின் தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்துவது) பயன்படுத்தப்பட்டது. உலகக் கோப்பையில் அதிக முறை டி.ஆர்.எஸ். பயன்படுத்தப்பட்ட ஆட்டம் இதுதான்.
100
இந்த உலகக் கோப்பையில் முதலில் பேட் செய்த அணிகளின் கடைசி 10 ஓவர் சராசரி 100 ரன்களாகும்.
247
அயர்லாந்துக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவின் ஆம்லா-டூ பிளெஸ்ஸி ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 247 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில் 2-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த தென் ஆப்பிரிக்க ஜோடி என்ற பெருமையைப் பெற்றது.
2
அயர்லாந்துக்கு எதிராக 411 ரன்கள் குவித்ததன் மூலம் உலகக் கோப்பையில் தொடர்ந்து 2-வது முறையாக 400 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது தென் ஆப்பிரிக்கா. முந்தைய ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 408 ரன்கள் குவித்தது தென் ஆப்பிரிக்கா. இதுதவிர உலகக் கோப்பையில் ஓர் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த அணிகள் வரிசையிலும் 2-வது இடத்தில் உள்ளது தென் ஆப்பிரிக்கா.
200
உலகக் கோப்பை போட்டியில் 5-வது முறையாக 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது தென் ஆப்பிரிக்கா. அதற்கடுத்தபடியாக ஆஸ்திரேலியா 4 முறை 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டுள்ளது.
5
ஒருநாள் போட்டியில் 5 முறை 400 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது தென் ஆப்பிரிக்கா. இதன்மூலம் அதிக முறை 400 ரன்களுக்கு மேல் குவித்த அணி என்ற பெருமையை இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளது தென் ஆப்பிரிக்கா.
ஆம்லா புதிய சாதனை
அயர்லாந்துக்கு எதிராக சதமடித்ததன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 20 சதங்களை எட்டியவர் என்ற சாதனையைப் படைத்தார் தென் ஆப்பிரிக்காவின் தொடக்க வீரரான ஹசிம் ஆம்லா. அவர் தனது 108-வது இன்னிங்ஸில் (111-வது போட்டி) இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
முன்னதாக இந்தியாவின் விராட் கோலி 133-வது இன்னிங்ஸில் (141-வது போட்டி) 20 சதங்களை விளாசியதே சாதனையாக இருந்தது. அதை இப்போது ஆம்லா முறியடித்துள்ளார்.
இதுதவிர அதிக சதங்கள் அடித்த தென் ஆப்பிரிக்கர்கள் வரிசையில் டிவில்லியர்ஸுடன் 2-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார் ஆம்லா. ஹெர்ஷெல் கிப்ஸ் 21 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். சர்வதேச அளவில் ஒருநாள் போட்டி வரலாற்றில் 20 சதங்கள் அடித்த 12-வது வீரர் ஆம்லா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT