Last Updated : 18 Mar, 2015 09:40 AM

 

Published : 18 Mar 2015 09:40 AM
Last Updated : 18 Mar 2015 09:40 AM

அலுப்பை ஏற்படுத்திய லீக் ஆட்டங்கள்: போட்டி நடத்தும் முறையில் மாற்றம் வருமா?

உலகக்கோப்பைப் போட்டி தற்போது பர பரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கிரிக் கெட் ஆட்டத்தை மேம்போக்காக அறிந்தவர் களைக்கூட, போட்டி தொடங்குவதற்கு முன் பாகக் கேட்டிருந்தால், காலிறுதிக்குத் தகுதி பெறப்போகும் அணிகள் எவை என்பதை 95 சதவீதம் சரியாகச் சொல்லியிருப்பார்கள்.

எதிர்பார்த்தபடியே டெஸ்ட் அந்தஸ்து பெறாத 5 அணிகள் வெளியேறிவிட்டன. தகுதிச் சுற்றில் எதிர்பாராத ஒரு திருப்பம் என்னவெனில் இங்கிலாந்து வெளியேறியதுதான். இந்த ஒரு மாற்றத்தைத் தவிர்த்துப் பார்த்தால், காலிறுதிக்குத் தகுதி பெற்ற மற்ற அணிகளின் பட்டியல் கணிக்கப்பட்டதுதான்.

இதனால், உலகக்கோப்பைப் போட்டிகள் தொடங்கியவுடன் காட்டிய ஆர்வத்தை, லீக் சுற்றின் இறுதியில் பெரும்பாலானோர் காட்டவில்லை. சிறிய அணிகள் தோற்பதும், பெரிய அணிகள் காலிறுதிக்குத் தகுதி பெறுவதும் உறுதியாகிவிட்டதால் பெரும் பாலான கடைசிக்கட்ட லீக் போட்டிகள் சலிப்பை ஏற்படுத்துவதாக இருந்தன.

அயர்லாந்து வேண்டுகோள்

முதல் சுற்றில் வெளியேறிய அணிகளில் ஒட்டுமொத்த பாராட்டைப் பெறவேண்டிய அணியென்றால் அது அயர்லாந்து மட்டுமே. அது பற்றி அயர்லாந்து கேப்டன் போர்ட்டர்பீல்ட் கூறும்போது, “கடந்த உலகக்கோப்பைக்கும் இப்போதைய போட்டிக்கும் இடையே பெரிய அணிகளுடன் எட்டு அல்லது ஒன்பது முறைதான் விளையாட முடிந்தது.

ஆனால், டெஸ்ட் ஆடும் நாடுகள் ஓராண்டில் சுமார் 25 ஒரு நாள் போட்டிகளில் ஆடுகிறார்கள். அனுபவமின்மை காரணமாக, நெருக்கடியான நேரத்தில் செயல்படத் தெரியாமல் இந்தியாவிடம் தோற்றோம்,” என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

உலகக்கோப்பை தொடங்கியபோது தரவரிசையில் முன்னணியில் இருந்த ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் இதுவரை மோதவில்லை. வலுவான இந்த அணிகள் நேருக்கு நேர் மோதிக்கொள்ளாமலேயே உலகக்கோப்பையை வென்றுவிடவும் வாய்ப்புண்டு. பலமான ஒரு அணி, மற்றொரு பலமான அணியுடன் மோதாமலேயே கோப்பையை வென்றுவிட்டால் அது ஒரு முழுமையான வெற்றியாக இருக்காது என்பதே கிரிக்கெட் ஆர்வலர்களின் கருத்து.

ரவுண்ட் ராபின்

ஆனால், 1992-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா-நியூஸிலாந்தில் நடந்த உலகக்கோப்பையில், இரு பிரிவாக பிரிக்கும் நடைமுறையைக் கைவிட்டு, முதல் முறையாக ரவுண்ட் ராபின் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, போட்டியில் பங்கேற்ற 9 அணிகளும் ஒன்றோடு ஒன்று மோதவேண்டியிருந்தது. அப்படி மோதியதில் அப்போதைய நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, தனது சொந்த மண்ணிலேயே தோல்வியைத் தழுவி, பட்டியலில் பின்தங்கி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பினை இழந்தது. கடைசி வரை அரையிறுதிக்குத் தகுதி பெறும் அணியைக் கணிப்பது சிரமமாகவே இருந்தது.

சூப்பர் சிக்ஸ்

1999-ல் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் முதல்முறையாக சூப்பர் சிக்ஸ் விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, தலா 6 அணிகள் கொண்ட இரு பிரிவு உருவாக்கப்பட்டது. அதில், முதல் மூன்று இடங்கள் பெற்ற அணிகள், சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றன. பின்னர், அந்த 6 அணிகளுக்குள் போட்டி நடத்தப்பட்டு, அதில் முதல் நான்கிடங்களைப் பெற்ற அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.

2003-ல் நடந்த உலகக்கோப்பையிலும் சூப்பர் சிக்ஸ் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது, முதல் முறையாக அதிகபட்சமாக 14 அணிகள் பங்கேற்றது சிறப்பம்சம். அந்த உலகக்கோப்பையும் விறுவிறுப்பாக, ரசிக்கும் வகையில் அமைந்தது.

ஆனால், 2007-ம் ஆண்டுக்குப் பிறகு என்ன காரணத்தாலோ, பழைய முறையே கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. இந்த நடைமுறையில் காலிறுதிக்குப் பிறகே போட்டி விறுவிறுப்படைகிறது. அதனால், அடுத்த உலகக்கோப்பையையாவது சுவாரஸ்யமானதாக மாற்ற ஐசிசி முயற்சி எடுக்க வேண்டுமென ரசிகர்களும், ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x