Published : 30 Mar 2015 03:44 PM
Last Updated : 30 Mar 2015 03:44 PM
உலகக் கோப்பை அரையிறுதியில் சொதப்பிய விராட் கோலிக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ள ராகுல் திராவிட், டெஸ்ட் போட்டிகளில் அவர் ஆடியதை நாம் மறந்து விட்டோம் என்று விமர்சகர்களைச் சாடியுள்ளார்.
"நமக்கு குறைவான ஞாபகசக்தி, டெஸ்ட் போட்டிகளில் அவர் மிகச்சிறப்பாக விளையாடினார், இன்னும் சொல்லப்போனால் அவரது ஆட்டம் உண்மையில் பரபரப்பு ஏற்படுத்திய ஒன்றாகும்.
டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு வந்து அந்த அணிக்கு எதிராக விராட் கோலி அளவுக்கு சிறப்பாக விளையாடிய ஒரு பேட்ஸ்மெனை என்னால் குறிப்பிட முடியவில்லை. அவருடைய மிகச்சிறந்த திறமையை நாம் பார்த்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அன்று (அரையிறுதி) அவரால் விளையாட முடியவில்லை. ஆனால் விளையாட்டில் இவையெல்லாம் சகஜம்.
உண்மையாகக் கூற வேண்டுமென்றால், ஆஸ்திரேலியாவில் இருந்த இந்த 4 மாதக் காலக்கட்டத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தவில்லை.
இரண்டு சிறந்த அணிகள் இறுதியில் மோதின, இந்திய அணி அவர்களால் முடிந்த வரை சிறப்பாகச் செயல்பட்டனர். அரையிறுதி வரை வருவது கடினமானதே.
இந்திய அணி ஒரு இளம் அணி, இங்குள்ள நிலைமைகளில் ஆஸ்திரேலியா எனும் தடையைக் கடக்க முடியாது என்பதே உண்மை.” என்றார் திராவிட்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT