Published : 17 Mar 2015 09:51 AM
Last Updated : 17 Mar 2015 09:51 AM
உலகக் கோப்பை போட்டியில் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் இடம் பெறாதது ஏன் என்பது குறித்து கேப்டன் தோனி விளக்கமளித்துள்ளார்.
உலகக் கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்பு ஆஸ்திரேலியாவில் இந்திய அணி பல தோல்விகளை சந்தித்தது. இதனால் கேப்டன் தோனி கடுமை யான விமர்சனத்துக்கு உள்ளானார்.
உலகக் கோப்பைக்கான அணியில் யுவராஜ் சிங், வீரேந்திர சேவாக், கவுதம் கம்பீர், ஹர்பஜன் சிங் போன்ற மூத்த வீரர்களை அணியின் தேர்வுக்குழு சேர்க்காதது குறித்தும் கேப்டன் தோனி மீதுதான் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
முக்கியமாக யுவராஜ் சிங்கின் தந்தை, தனது மகனை இந்திய அணி யில் சேர்க்கவிடாமல் செய்தது கேப்டன் தோனி என்று பொது நிகழ்ச் சியில் நேரடியாகவே குற்றம்சாட்டி னார். அதே நேரத்தில் யுவராஜ் அதற்கு மறுப்புத் தெரிவித்தார்.
இப்போது உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றிகள் தோனியை விமர்சித்தவர்களை வாயடைக்க செய்தன. அவரது தலைமைப் பண்பை பலரும் புகழ்ந்து வருகின்றனர்.
தன்மீதான விமர்சனங்களை யும், புகழுரையையும் எப்போதுமே பெரிதாக எடுத்துக் கொள்ளாத தோனி, யுவராஜ் அணியில் சேர்க்கப்படாதது குறித்து முதல்முறையாக கருத்துத் தெரிவித்துள்ளார். மெல்போர்னில் நேற்று தோனி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது 2011 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங்கின் சிறப்பான பங்களிப்பு போன்று இந்த உலகக் கோப்பையில் ரெய்னாவின் பங்களிப்பு இருக்குமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, இப்போது உலகக் கோப்பை போட்டியில் 30 யார்டு வளையத்துக்குள் 4 பீல்டர்கள் மட்டுமே இருக்க வேண்டுமென்று கட்டுப்பாடு உள்ளது. எனவே யுவராஜ் சிங் அதிகம் பந்து வீச முடியாது.
யுவராஜ் சிங் சிறந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்பதில் சந்தேகமில்லை. புதிய விதிமுறை களின்படி 30 யார்டு வளையத்துக்கு வெளியே 4 பீல்டர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த புதிய விதிமுறைக்குப் பிறகு யுவராஜ் நிறைய ஓவர்கள் வீசவில்லை. விதிமுறை மாறிய பிறகு அவரது பந்துவீச்சு பாதிக்கப்பட்டது. இதே நேரத்தில் 20 ஓவர் போட்டிகளில் அவரால் சிறப்பாக பந்துவீச முடியும்.
புதிய விதி அறிமுகப் படுத்தப்படுவதற்கு முன்பு சேவாக், சச்சின், யுவராஜ் ஆகியோர் அதிக ஓவர்கள் பந்துவீசுவார்கள். அப்போது அணி அவர்களது இந்த பந்து வீச்சு பங்களிப்பையும் நம்பி இருந்தது என்று கூறலாம். ஆனாலும், இவர்கள் பகுதி நேர வீச்சாளர்கள்தான். பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளத்தில் இவர்கள் பந்துவீசுவது கடினம்.
இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ரெய்னா சிறப்பாக பந்து வீசி வருகிறார். அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் சிறப்பாக பந்து வீசினார். ஷீகர் தவண், ரோஹித் சர்மா ஆகியோரும் பந்து வீசுவார்கள். நிலைமை நமக்கு சாதமாக இருக்கும்போது அவர்களை பந்து வீச வைக்க முடியும்.
பேட்டிங்கில் யுவராஜ் சிங்கை யும், ரெய்னாவையும் ஒப்பிடுவது கடினம். ஏனெனில் யுவராஜ் முதலில் 5-வது பேட்ஸ்மேனாக இறங்கினார். அதன் பிறகு சிறப்பான ஆட்டத்தால் 4-வது பேட்ஸ்மேனாக களமிறங்கினார். ஆனால் இப்போது ரெய்னா தொடர்ந்து 5-வது பேட்ஸ்மேனாக விளை யாடுகிறார்.
பல நேரங்களில் நானும் கூட 5-வதாக களமிறங்குகிறேன். கடந்த உலகக் கோப்பையை ஒப்பிடும்போது இப்போது ஆல் ரவுண்டர்கள் தங்கள் திறமையை காட்ட அதிக வாய்ப்புகள் இல்லை. என்று தோனி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT