Published : 27 Feb 2015 08:47 PM
Last Updated : 27 Feb 2015 08:47 PM
நடப்பு உலகக்கோப்பைப் போட்டித் தொடரில் டேனியல் வெட்டோரி சிறப்பாக வீசி அசத்தி வருகிறார். இதனால் ஆஸி.க்கு எதிராக இவர் மீது ஏதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அவர் இந்த உலகக்கோப்பை தொடரில் இதுவரை 152 பந்துகளை வீசியுள்ளார். இதில் 1 பவுண்டரி ஒரு சிக்ஸ் மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார். 90 பந்துகள் ரன் இல்லாத பந்துகளை அவர் வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு எதிராக 10-0-34-2 என்று அருமையாக வீசிய போது ஒரேயொரு பவுண்டரி மட்டுமே கொடுத்தார்.
அடுத்ததாக ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக 8.2 ஓவர்கள் வீசி 1 மெய்டனுடன் 24 ரன்களுக்கு 3 விக்கெட். இதில் ஒரு சிக்ஸர் கொடுத்தார்.
இங்கிலாந்துக்கு எதிராக 7 ஓவர் 19 ரன் ஒரு விக்கெட். ஒரு பவுண்டரி கூட விட்டுக் கொடுக்கவில்லை.
மொத்தம் 25.2 ஓவர்களில் அவர் 77 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இதுவரை 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதே ஃபார்ம் தொடர்ந்தால் ஆஸி.க்கு கடினம்தான்.
ஆக்லாந்து ஈடன் பார்க்கில் நியூசி.யை வீழ்த்துவது கடினம் என்று ஸ்டீவ் வாஹ் கூறினாலும் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இந்த மைதானத்தில் 16 போட்டிகளில் 11 போட்டிகளை வென்றுள்ளது ஆஸ்திரேலியா, இதில் கடைசி 5 போட்டிகளில் 4-இல் ஆஸி. வெற்றி.
பிரெண்டன் மெக்கல்லம் இன்னும் 47 ரன்களை எடுத்தால் ஆஸி.க்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் 1000 ரன்களை எடுத்த 4-வது நியூசி. வீரர் என்ற பெருமையை அடைவார்.
இங்கிலாந்தை நசுக்கிய டிம் சவுதி ஆஸி. பேட்ஸ்மென் ஷேன் வாட்சனுக்கு ஒரு நாள் போட்டிகளில் 75 பந்துகளை வீசியுள்ளார். இதுவரை ஷேன் வாட்சனை, சவுதி வீழ்த்தியதில்லை, ஆனால் வாட்சன் சவுதியை 75 ரன்கள் அடித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT