Last Updated : 24 Feb, 2015 09:46 AM

 

Published : 24 Feb 2015 09:46 AM
Last Updated : 24 Feb 2015 09:46 AM

கூடுதல் பயிற்சி வேண்டாம்; புத்துணர்வோடு இருங்கள்- இந்திய அணிக்கு சச்சின் அறிவுரை

இந்திய கிரிக்கெட் அணியினர் கூடுதல் பயிற்சி எடுத்து சுமையை ஏற்றிக்கொள்ளக்கூடாது. அளவான பயிற்சி மற்றும் புத்துணர்வு என சமநிலையோடு இருக்க வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

அதிக பயிற்சி தேவையில்லை என்ற தோனியின் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவர் மேலும் கூறியதாவது: கூடுதல் பயிற்சியால் சுமையை ஏற்றாமல் அளவான பயிற்சி, புத்துணர்வு என சமநிலையோடு இருக்க வேண்டும்.

ஒரு வீரர் சரியாக விளையாடவில்லை என தெளிவாகிவிட்டால் அவர் கடின பயிற்சியில் ஈடுபட வேண்டும். முடிந்த அளவுக்கு பேட் செய்வதோடு பந்தும் வீச வேண்டும்.

ஆனால் நன்றாக விளையாடும் பட்சத்தில் ஆற்றலை சேமித்து வைப்பது முக்கியமானது. அப்போதுதான் போட்டியின்போது சிறப்பாக ஆட முடியும்.

இப்போது எல்லா போட்டிகளிலும் அதிக ரன்கள் குவிக்கப்படுவதற்கு காரணம் இரண்டு விஷயங்கள்தான். ஒன்று விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. புதிய விதிமுறைப்படி 30 யார்ட் சர்க்கிளுக்கு வெளியில் இருக்கும் பீல்டர்களின் எண்ணிக்கை 5-லிருந்து 4-ஆக குறைக்கப்பட்டது மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அதனால் எந்தப் பகுதியில் பந்துவீசுவது என தெரியாமல் பந்துவீச்சாளர்கள் திணறுகிறார்கள். மற்றொன்று டி20 போட்டியின் வருகை. இதனால் அபாயகரமான ஷாட் களையும், புதுமையான ஷாட் களையும் அடிப்பதற்கு வீரர்கள் கற்றுக் கொண்டுள்ளனர்.

1980-களிலோ அல்லது 1990-களிலோ வேகப்பந்து வீச்சில் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்கும் பேட்ஸ்மேன்கள் மிகக்குறைவு.

ஆனால் இன்றைக்கு அது அதிகமாக நடக்கிறது. ஓவருக்கு 8 ரன்கள் தேவைப் பட்டாலும் அது எட்டக்கூடிய இலக்காகி விட்டது.

டி20 போட்டி களில் ஓவருக்கு 9 ரன்களோ அல்லது அதற்கு மேலோ தேவைப் படுகிறது. ஆனால் அதை அடிப் பதற்கு இன்றைய பேட்ஸ்மேன்கள் மனதளவில் தயாராகிவிட்டார்கள். அவர்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x