Published : 08 Feb 2015 12:44 PM
Last Updated : 08 Feb 2015 12:44 PM
காயம் காரணமாக கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து சர்வதேச போட்டிகளில் விளையாடாத இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஷித் மலிங்கா தனக்கு நெருக்கடி என்றால் என்னவென்றே தெரியாது என்று கூறியுள்ளார்.
வேகம் குறைந்து, வயிறும் அவருக்கு முன்னால் நீண்டு கொண்டிருக்க லஷித் மலிங்காவின் தோற்றம் அவரை அச்சுறுத்தும் பவுலர் என்ற நிலையிலிருந்து கீழே இறக்கி விடுமோ என்று ஊடகங்கள் கேள்வி எழுப்பி வருகின்றன.
“நெருக்கடி தருணங்கள் என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது. பிரஷர் தருணங்கள் எனக்கு பழக்கமானவை. அதனால் நெருக்கடி பற்றி தனியாகப் பேச வேண்டினால் எனக்கு அதைப்பற்றி தெரியாது என்றே கூறுவேன். நான் எப்போதும் எங்கு விளையாடுகிறேன், சூழ்நிலைமைகள் என்ன என்பதையெல்லாம் நான் பார்ப்பதில்லை. நியூஸி.யில் பவுன்ஸ் இருக்கும் என்பது தெரியும், ஆனால் எப்போது எனது தனிப்பட்ட திறமையை நம்புகிறேன்.
கடந்த சில தினங்களாக வழக்காமாக ஓடி வந்து வீசுவது போல் வீசிவருகிறேன். நான் நல்ல இசைவில் இருப்பதாகவே உணர்கிறேன். பயிற்சிப் போட்டிகளுக்காக காத்திருக்கிறேன்.
கடந்த 2 மாதங்களாக நான் பந்துவீசியதன் வீடியோ பதிவுகளை பார்த்து என்ன செய்ய வேண்டும் என்பதைத் திட்டமிட்டுள்ளேன்.” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT