Published : 16 Feb 2015 04:46 PM
Last Updated : 16 Feb 2015 04:46 PM
ஐபிஎல் கிரிக்கெட் வீர்ர்கள் ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் இர்பான் பத்தானை ரூ.1.5 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது.
அதே போல் ஜாகீர் கானை ஏலம் எடுக்க மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர் டெவில்ஸ் அணியிடையே கடும் போட்டி நிலவியது. கடைசியில் ஜாகீர் கானை டெல்லி டேர் டெவில்ஸ் அணி ரூ.4 கோடிக்கு வாங்கியது.
ஜாகீருக்கு அடுத்த படியாக ஏலத்துக்கு வந்த கர்நாடக வேகப்பந்து வீச்சாளர் அபிமன்யு மிதுனை மும்பை இந்தியன்ஸ் ரூ.30 லட்சத்திற்கு வாங்கியது.
தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் ஆல்பி மோர்கெலை ரூ.30 லட்சத்திற்கு டெல்லி டேர் டெவில்ஸ் அணி வாங்கியுள்ளது. பாண்டிங், ஆகாஷ் அம்பானியுடன் கலந்தாலோசித்து ஆல்பியை வாங்கலாம் என்று நினைத்திருந்த நேரத்தில் டெல்லி டேர் டெவில்ஸ் அணி ரூ.30 லட்சத்திற்கு அவரை ஒப்பந்தம் செய்தது.
டேரன் சாமியை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரூ.2.8 கோடிக்கு வாங்கியது.
அங்குஷ் பெய்ன்ஸ் என்ற இமாச்சல அணியை சேர்ந்த விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மெனை சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியுள்ளது. இவர் முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்தார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் இதுவரை ஒரு இந்திய வேகப்பந்து வீச்சாளரையும் ஏலம் எடுக்கவில்லை. அந்த அணி மிட்செல் ஜான்சனை நம்பியே உள்ளது.
இர்பான் பத்தானை வாங்கியதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பிரெண்டம் மெக்கல்லம், மைக் ஹஸ்ஸி, டு பிளேசிஸ், ரெய்னா, ஜடேஜா, தோனி, இர்பான் பத்தான், அஸ்வின், ராகுல் சர்மா, நெஹ்ரா என்று பல முக்கிய வீரர்களைக் கொண்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT