Published : 25 Feb 2015 11:19 AM
Last Updated : 25 Feb 2015 11:19 AM
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற ஜிம்பாப்வேக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் அதிவேக இரட்டை சதமடித்தார். அவரது சாதனைத் துளிகள்:
ரன்கள் குவித்ததன் மூலம் உலகக் கோப்பை போட்டியின் ஓர் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையைப் படைத்தார் கெயில். முன்னதாக 1996-ல் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவின் கேரி கிர்ஸ்டன் 188 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது.
ஒருநாள் போட்டி வரலாற்றில் ஓர் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார் கெயில். ரோஹித் சர்மா (264), சேவாக் (219) ஆகியோர் முதல் இரு இடங்களில் உள்ளனர்.
ஒருநாள் போட்டி வரலாற்றில் இதுவரை 4 பேட்ஸ்மேன்கள் மட்டுமே இரட்டை சதமடித்துள்ளனர். கெயில் தவிர சச்சின், சேவாக், ரோஹித் சர்மா ஆகியோர் இரட்டை சதமடித்துள்ளனர். இதில் ரோஹித் சர்மா இரு முறை இரட்டை சதமடித்துள்ளார்.
பந்துகளில் இரட்டை சதமடித்ததன் மூலம் அதிவேக இரட்டை சதமடித்தவர் என்ற சாதனையைப் படைத்தார் கெயில். முன்னதாக சேவாக் 140 பந்துகளில் இரட்டை சதமடித்ததே சாதனையாக இருந்தது. சச்சின் 147 பந்துகளிலும், ரோஹித் சர்மா 151 மற்றும் 156 பந்துகளிலும் இரட்டை சதமடித்துள்ளனர்.
சிக்ஸர்களை விளாசியதன் மூலம் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர் அடித்தவர் என்ற சாதனையை டிவில்லியர்ஸ், ரோஹித் சர்மா ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார் கெயில்.
கெயில்-சாமுவேல்ஸ் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 372 ரன்கள் குவித்ததன் மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த ஜோடி (பார்ட்னர்ஷிப்) என்ற உலக சாதனையை படைத்தது. முன்னதாக 1999-ல் நியூஸிலாந்துக்கு எதிராக சச்சின்-திராவிட் ஜோடி 331 ரன்கள் குவித்ததே உலக சாதனையாக இருந்தது.
ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியோடு சேர்த்து 9,136 ரன்கள் (266 போட்டிகள்) குவித்துள்ளார் கெயில். இதன்மூலம் 9 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் 2-வது மேற்கிந்தியத் தீவுகள் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். முதல் வீரர் லாரா ஆவார். லாரா 299 போட்டிகளில் விளையாடி 10,405 ரன்கள் குவித்துள்ளார். சர்வதேச அளவில் 9 ஆயிரம் ரன்களைக் கடந்த 16-வது வீரர் கெயில் ஆவார்.
இந்தப் போட்டியோடு சேர்த்து மொத்தம் 22 சதங்களை அடித்துள்ள கிறிஸ் கெயில், ஒருநாள் போட்டியில் அதிக சதங்கள் அடித்தவர்கள் வரிசையில் சவுரவ் கங்குலி, விராட் கோலி ஆகியோருடன் 4-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ரன்கள் குவித்ததன் மூலம் ஒருநாள் போட்டியில் தனது அதிகபட்ச ஸ்கோரைப் பதிவுசெய்தது மேற்கிந்தியத் தீவுகள். உலகக்கோப்பையில் அடிக்கப் பட்ட 5-வது அதிகபட்ச ஸ்கோர் இது.
கடைசி 13 ஓவர்களில் மட்டும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 195 ரன்கள் குவித்தது. கடைசி 10 ஓவர்களில் 152 ரன்கள் எடுத்தது.
டெஸ்ட் போட்டியில் முச்சதமும், ஒருநாள் போட்டியில் இரட்டை சதமும், டி20 போட்டியில் சதமும் அடித்த ஒரே வீரர் கிறிஸ் கெயில்தான்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இதுவரை 3,612 ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் 5 முறை மட்டுமே இரட்டை சதம் அடிக்கப்பட்டுள்ளது.
பந்துகளை எதிர்கொண்டதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக பந்துகளை எதிர்கொண்ட ஜோடி என்ற பெருமையைப் பெற்றுள்ளது கெயில்-சாமுவேல்ஸ் ஜோடி. முன்னதாக 1999-ல் நியூஸிலாந்துக்கு எதிராக இந்தியாவின் சச்சின்-திராவிட் ஜோடி 278 பந்துகளை எதிர்கொண்டதே சாதனையாக இருந்தது.
இப்படி ஒரு நெருக்கடியை சந்தித்ததில்லை: கெயில்
ரன் குவிக்க முடியாமல் தொடர்ந்து தடுமாறி வந்த கெயில், ஜிம்பாப்வேக்கு எதிராக இரட்டை சதமடித்ததன் மூலம் நெருக்கடியில் இருந்து மீண்டுள்ளார்.
இரட்டை சதமடித்த பிறகு அவர் கூறியிருப்பதாவது: சமீப காலமாக பெரிய அளவில் ரன் குவிக்காததால் கடுமையான நெருக்கடி ஏற்பட்டது. இதற்கு முன் இப்படி ஒரு நெருக்கடியை சந்தித்ததில்லை. என்னுடைய வாழ்க்கையில் முதல்முறையாக ஏராளமானோர் நான் ரன் குவிக்க வேண்டும் என டுவிட்டரில் கூறியிருந்ததைப் பார்த்தேன். அவர்கள் நினைத்தைப் போலவே அவர்கள் கொண்டாடும் அளவுக்கு ரன் குவித்துவிட்டது மகிழ்ச்சியளிக்கிறது.
30 யார்ட் சர்க்கிளுக்கு வெளியில் 4 வீரர்கள் மட்டுமே நிற்க வேண்டும் என்ற புதிய விதிமுறை வந்த பிறகு நான் ஒரு அரைசதம் மட்டுமே அடித்தேன். ஆனால் அந்த புதிய முறையால் ரன் குவிப்பது கொஞ்சம் எளிதாகிவிட்டது. நான் சொன்னதைப் போலவே சதத்தை கடந்துவிட்டால் அதன்பிறகு பெரிய ஸ்கோரை குவித்துவிடுவேன்.
ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்ததிலிருந்தே நானும் அதை செய்ய வேண்டும் என ஏராளமான ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அவர்கள் நினைத்தது போலவே இன்று இரட்டை சதமடித்துவிட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது.
வயது மற்றும் காயப் பிரச்சினைகள் எனக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கின்றன. 2013 நவம்பரில் இருந்தே தசைநார் முறிவு மற்றும் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் போன்றவை அணியில் இடம்பெறாத முடியாத அளவுக்கு என்னை பாதித்துவிட்டன. ஜிம்பாப்வேக்கு எதிரான இந்தப் போட்டியைப் பொறுத்தவரையில் ஆரம்பத்தில் ரன் சேர்ப்பதற்கு கடுமையாகப் போராடினேன். சற்று பதற்றமும் இருந்தது. நான் பார்முக்கு திரும்புவதற்கு நல்ல வாய்ப்பு தேவைப்பட்டது. அது இன்று கிடைத்தது. அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT