Last Updated : 06 Feb, 2015 10:23 AM

 

Published : 06 Feb 2015 10:23 AM
Last Updated : 06 Feb 2015 10:23 AM

கிரிக்கெட் பேட் அளவு விதிமுறை: கிறிஸ் கெயில் எதிர்ப்பு

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் பயன்படுத்தும் பேட் தொடர்பாக புதிய விதிமுறைகளை வகுக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) முடிவுக்கு மேற்கிந்தியத்தீவுகள் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில் உள்ளிட்ட பல வீரர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது பேட்ஸ் மேன்கள் அதிரடியாக விளையாட பயன்படுத்தும் அகலமான பேட் களுக்கு கட்டுப்பாடு கொண்டு வருவது குறித்து ஐசிசி பரிசீலித்து வருவதாக அதன் தலைமை அதிகாரியும் முன்னாள் தென்னாப் பிரிக்க விக்கெட் கீப்பருமான டேவ் ரிச்சர்ட்ஸன் கூறியிருந்தார்.

பேட்ஸ்மேன்கள் தவறாக கணித்து விளையாடும்போது மட்டையின் விளிம்பில் படும் பந்து கூட எல்லைக்கோட்டுக்கு மேலே பறந்து சிக்ஸர் ஆகிவி டுகிறது. இது கிரிக்கெட் போட்டி களை நியாயமாக நடத்துவதாக படவில்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது என்று டேவ் ரிச்சர்ட்ஸன் விளக்கியிருந்தார்.

இப்போதைய நிலையில் பேட்டின் தடிமன் குறித்து எந்த கட்டுப்பாடும் இல்லை. எனவே வீரர்கள் தங்கள் வசதிப்படி பேட்டை வடிவமைத்துக் கொள்கின்றனர்.

இந்நிலையில் ஐசிசியின் முடிவுக்கு கிறிஸ் கெயில் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் சிட்னி மார்னிங் ஹேரால்ட் பத்திரிகையில் “பெரிய வீரர்களுக்கு பெரிய பேட் தேவை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது:

கிரிக்கெட்டை பேட்ஸ்மேன் களின் விளையாட்டாக மாறிவிட்ட தாகக் கூறுகிறார்கள். அதே நேரத்தில் பந்து வீச்சாளர்கள் மிகவும் திறமைசாலிகளாக வளர்ந்து விட்டனர் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே கிரிக்கெட் பேட்டின் அளவை வரையறை செய்யும் ஐசிசி-யின் யோசனையில் எனக்கு உடன்பாடு இல்லை என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ கூறுகையில், கெயில், ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஆகியோர் 44 மில்லி மீட்டர் தடிமன் கொண்ட பேட்டை பயன்படுத்துவதில் தவறில்லை. ஏனெனில் அவர்கள் அந்த பேட்டை பயன்படுத்தும் உடல் வலுவை உடையவர்கள் என்று தெரிவித்தார்.

முன்னாள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மைக்கெல் பெவன், ஐசிசி-யின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x