Published : 21 Feb 2015 02:36 PM
Last Updated : 21 Feb 2015 02:36 PM
பிரிஸ்பனில் ஆஸ்திரேலியா-வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று புயல் மழை காரணமாக கைவிடப்பட்டதால் ஏ-பிரிவு அணிகளில் இங்கிலாந்துக்கு நெருக்கடி அதிகமாகியுள்ளது.
புள்ளிகள் பகிர்ந்து கொள்ளப்பட்டதால் தற்போது ஆஸ்திரேலியா, வங்கதேச அணிகள் தலா ஒரு வெற்றியுடன் 3 புள்ளிகளை பெற்றுள்ளது.
இதனால் அட்டவணையில் கடைசி நிலையில் உள்ள இங்கிலாந்துக்கு நெருக்கடி அதிகமாகியுள்ளது.
வங்கதேச கேப்டன் மஷ்ரபே மோர்டசா உற்சாகமாகி கூறும் போது, “நாங்கள் இன்னும் 2 அல்லது 3 போட்டிகளில் வெல்ல வேண்டும், இதனை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.
இங்கிலாந்து நெருக்கடியில் இருக்கிறதா என்று இப்போது என்னால் கூற முடியவில்லை. ஆனால் நாங்கள் அவர்களுக்கு எதிரான போட்டியையும், இலங்கை மற்றும் ஸ்காட்லாந்து போட்டிகளையும் எதிர்நோக்குகிறோம்.
வங்கதேசம் அடுத்ததாக இலங்கை அணியுடன் மெல்போர்னில் அடுத்த வியாழக்கிழமை (பிப்.26) மோதுகிறது. மார்ச் 9-ஆம் தேதி அடிலெய்டில் வங்கதேச அணி இங்கிலாந்துடன் மோதுகிறது.
இன்றைய புள்ளிகள் பகிர்வினால் வங்கதேசத்திற்கு அடுத்த சுற்றுக்கு முன்னேற ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இங்கிலாந்து மீண்டெழ முடியாத தோல்வியை அன்று நியூசிலாந்துக்கு எதிராகச் சந்தித்ததால் அந்த அணி மீண்டும் தங்களை ஓருங்கிணைத்து மீதமுள்ள போட்டிகளில் வெல்வது அவசியமாகியுள்ளது. ஆஸி., நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக அந்த தோல்வி தழுவியது தொடக்கத்திலேயே நிகழ்ந்து விட்டதால் மீதமுள்ள இலங்கை, ஸ்காட்லாந்து, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராக இங்கிலாந்து வெற்றி பெற்றாக வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT