Published : 24 Feb 2015 09:43 AM
Last Updated : 24 Feb 2015 09:43 AM
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றியால் இந்திய அணி மிகப்பெரிய உத்வேகத்தைப் பெறும் என முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
இந்தியாவிடம் 130 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா தோல்வி கண்ட நிலையில், இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா படுதோல்வி கண்டுள்ளது. அந்த அணி நீண்ட காலமாக இப்படியொரு தோல்வியை சந்தித்ததாக எனக்கு நினைவில்லை.
ஷிகர் தவனுக்கு நம்பிக்கையளிக் கக்கூடிய இன்னிங்ஸ் ஒன்று தேவைப் பட்டது. அது பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் அவருக்கு கிடைத்தது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆடிய அதே ஆட்டத்தை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் ஆடி சதமடித்திருக்கிறார்.
இதுதவிர சுரேஷ் ரெய்னா, தோனி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பார்முக்கு திரும்புவது மிகவும் அவசிய மானது. இந்திய அணி ரன் குவிப் பதில் பெரும்பாலும் விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே ஆகியோ ரையே நம்பியுள்ளது. எனவே மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 250 ரன்களை எட்டியபோதே இந்தியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. தென் ஆப்பிரிக்காவின் பேட்டிங் வலுவாக இல்லாத நிலையில் ஆரம்பத்திலேயே ஆம்லா, டிவில்லியர்ஸை வீழ்த்தியது இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT