Published : 11 Feb 2015 09:41 AM
Last Updated : 11 Feb 2015 09:41 AM

அதிக உலகக் கோப்பையில் விளையாடியவர்கள்

2015 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவதன் மூலம் 5 உலகக் கோப்பைத் தொடர்களில் விளையாடிய வீரர்கள் பட்டியலில் இணைகிறார் இலங்கையின் மகிலா ஜெயவர்தனே.

இவரின் முதல் உலகக் கோப்பைப் போட்டி 1999. பாகிஸ்தானின் சயீத் அப்ரிடிக்கும் இது 5-வது உலகக் கோப்பைத் தொடர். இவருக்கும் 1999-ம் ஆண்டு தொடர்தான் முதல் உலகக் கோப்பைத் தொடர்.

அதிக உலகக் கோப்பைத் தொடர்களில் விளையாடியவர் என்ற பெருமையை பாகிஸ்தானின் ஜாவேத் மியான்தத் முதலில் பெற்றார். கடந்த 1975-ம் ஆண்டு தொடரில் அறிமுகமான மியான்தத், முதல் 6 உலகக் கோப்பைத் தொடர்களிலும் விளையாடியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் 1992 முதல் 2011 வரை நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடர்களில் பங்கேற்று, அதிக உலகக்கோப்பைத் தொடர்களில் பங்கேற்றவர் என்ற சாதனையை மியான்தத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதுவரை 17 பேர் 5 அல்லது அதற்கும் மேற்பட்ட உலகக் கோப்பைத் தொடர்களில் விளை யாடியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x