Published : 16 Feb 2015 05:48 PM
Last Updated : 16 Feb 2015 05:48 PM

தோனி மீதான அதிருப்தியை என் தந்தை பகிரங்கப்படுத்தியது ஏன்?- யுவராஜ் சிங் விளக்கம்

உலகக்கோப்பை அணியில் யுவராஜ் சிங் தேர்வு செய்யப்படாததற்கு தோனியே காரணம் என்று யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் கூறியதற்கு யுவராஜ் சிங் பதிலளித்துள்ளார்.

இது குறித்து யுவராஜின் தந்தையும் முன்னாள் இந்திய வீரருமான யோக்ராஜ் சிங் கூறும்போது, “என் மகனுடன் தோனிக்கு தனிப்பட்ட முறையில் பிரச்சினைகள் இருந்தால் என்னால் என்ன செய்ய முடியும்? கடவுள் நீதியளிப்பார். உங்கள் கேப்டன் பொறுப்பில் இந்தியா உலகக்கோப்பையை வெல்ல பிரார்த்திக்கிறேன். ஆனால் இது போன்று நீங்கள் (தோனி) நடந்து கொண்டதை விடவும் வேறு வருத்தங்கள் இருக்க முடியாது.” என்றார்.

ஆனால், தன் ட்விட்டர் பக்கத்தில் யுவராஜ் சிங், தனது தந்தையின் கருத்துக்கு விளக்கமளிக்கும் போது, “ஒவ்வொரு தந்தையும் போலவே என் தந்தைக்கு என் மீது பாசம் அதிகம். எப்போதும் அவர் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுபவர். தோனியின் தலைமையின் கீழ் ஆடியதையும் இனி ஆடப்போவதையும் எப்போதும் நான் நேசிக்கிறேன்.” என்றார். யுவராஜ்.

இன்று நடைபெற்ற ஐபில் ஏலத்தில் ரூ.16 கோடிக்கு டெல்லி அணி யுவராஜ் சிங்கை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x