Published : 23 Feb 2015 03:11 PM
Last Updated : 23 Feb 2015 03:11 PM
இந்தியாவுக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 130 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது அணியின் தன்னம்பிக்கை மீது விழுந்த அடியாகும் என்று தென்னாப்பிரிக்க கேப்டன் ஏ.பி.டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் கூறும் போது, “130 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது எங்களுக்கு ஒரு பெரிய அடிதான். இது ஏறக்குறைய சங்கடத்தை ஏற்படுத்திய தோல்வி என்றே கூற வேண்டியுள்ளது. எப்போதும் இவ்வளவு பெரிய ரன் இடைவெளியில் தோற்பதை ஒருவரும் விரும்ப மாட்டார்கள்.
எங்களது காயத்தை சிறிது நாங்கள் தடவி விட்டுக் கொள்ள வேண்டியதுதான். காலிறுதிக்கு முன்னேறுவது பற்றியதல்ல இந்தத் தோல்வி கொடுத்த விஷயம். இது போன்று ஆடுவது தன்னம்பிக்கையின் மீது விழுந்த அடியாகும்.
இரண்டு ரன் அவுட்களால் பின்னடைவு ஏற்பட்டது. ஜோடி சேர்ந்து ரன்களை எடுப்பதில் வெற்றி கண்டிருந்தால் நாங்கள் இலக்குக்கு அருகில் வந்திருப்போம். எனவே இந்த வகையில் இந்தத் தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
ரசிகர்களைப் பொறுத்தவரை இந்திய ரசிகர்களின் ஆதரவு நிறைய அந்த அணிக்கு இருந்தது. இது ஓரளவுக்கு அனுகூலமாக இருக்கும், எங்களுக்கும் ஆதரவு இருந்தது என்றே நான் கூறுவேன்.
விக்கெட்டுகளை வீழ்த்த கடினமாக இருந்தது. இந்தப் பிட்ச் 275-280 ரன்கள் பிட்ச் என்றே நான் கருதினேன். ஆனால், நாங்கள் 307 ரன்களுக்கு இந்திய அணியை கட்டுப்படுத்தினோம் என்றே கூற வேண்டும்.
ஆட்டத்தின் ஒருநேரத்தில் வெற்றி வாய்ப்பு இருந்ததாகவே நினைத்தோம். ஆனால் டாப் 6-இல் 2 ரன் அவுட்கள் ஏற்றுக் கொள்ளவே முடியாத அம்சம். இப்படிப்பட்ட பின்னடைவுகளை நாங்கள் அனுமதித்திருக்கக் கூடாது.”
என்றார் தென்னாப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT