Published : 03 Feb 2015 09:44 AM
Last Updated : 03 Feb 2015 09:44 AM
தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற மகாராஷ்டிராவைச் சேர்ந்த வலைப் பந்து வீரர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
35-வது தேசிய விளையாட்டுப் போட்டி கேரளாவில் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
நேற்று மகாராஷ்டிரா வலைப் பந்து அணியும் போட்டியில் பங்கேற்றது. போட்டி முடிந்த பிறகு அந்த அணி வீரர்களில் ஒருவரான மயூரிஷ் பவார் (21) தனக்கு நெஞ்சு வலிப்பதாக சகவீரர்களிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை சோதித்த மருத்துவர் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிகிறது.
இந்த சம்பவம் தேசிய விளையாட்டுப் போட்டியில் பெரும் சோக நிகழ்வாக அமைந்துவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT