Published : 20 Feb 2015 10:01 AM
Last Updated : 20 Feb 2015 10:01 AM
கிரானைட் ஓபன் ஸ்குவாஷ் போட்டியின் அரையிறுதியில் இந்திய வீராங்கனைகள் தீபிகா பலிக்கலும், ஜோஷ்னா சின்னப் பாவும் மோதுகின்றனர்.
கனடாவின் டோரன்டோ நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள தீபிகா பலிக்கல் 11—8, 9—11, 11—6, 7—11, 13—11 என்ற செட் கணக்கில் வேல் ஸின் ஜென்னி டங்காஃபை தோற்கடித்தார்.
மற்றொரு காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள ஜோஷ்னா 11—1, 11—8, 11—6 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் ரஹேல் கிரின்ஹாமுக்கு அதிர்ச்சி தோல்வியளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT