Last Updated : 09 Feb, 2015 04:49 PM

 

Published : 09 Feb 2015 04:49 PM
Last Updated : 09 Feb 2015 04:49 PM

தோனியும் ‘மேன்லி பியூட்டி பார்லர்’ சிகையலங்கார நிலையமும்

தோனி தனது சிகையலங்காரத்தை அடிக்கடி விதம் விதமாக மாற்றுபவர் என்பது நாம் அறிந்ததே. அவர் தனது ஆரம்ப கால கிரிக்கெட் வாழ்வில் இருந்த சமயம், ‘மேன்லி பியூட்டி பார்லர்’ என்ற ஒரு சிகையலங்கார நிலையத்திற்கு அடிக்கடி செல்வார் என்பது உள்ளிட்ட சுவையான தகவல் அடங்கிய அவரது வாழ்க்கை வரலாற்றை மூத்த பத்ரிகையாளர் பிஸ்வதீப் கோஷ் எழுதியுள்ளார்.

"எம்.எஸ்.டி, தி மேன், தி லீடர்" என்ற வாழக்கை வரலாற்று நூலில் தோனியைப் பற்றி இதுவரை கேள்விப்படாத தரவுகள், நிகழ்வுகள் மற்றும் அவரைப்பற்றி பிறர் கூறுவது என்று 245 பக்கங்க்ளுக்கு அந்த நூலை எழுதியுள்ளார் பிஸ்வதீப்.

தன் கிரிக்கெட் வாழ்வின் தொடக்க காலங்களில் ராஞ்சியில் உள்ள சாதாரணமான சலூன்களில் தோனியைப் பார்க்கலாம் என்று எழுதியுள்ள பிஸ்வதீப், பிறகு தோனி ஆடம்பர அழகு நிலையங்களுக்குச் செல்லத் தொடங்கினார் என்று கூறியுள்ளார்.

பிறகு தோனி கயா என்ற புகழ் பெற்ற அழகு நிலையத்தின் வாடிக்கையாளரானார். அவர் முன்பு அடிக்கடி செல்லும் ‘மேன்லி பியூட்டி பார்லர்’ என்ற சிகையலங்கார நிலையத்தில் வேலைபார்க்கும் குட்டு என்ற சிகையலங்கார நபரை பிஸ்வதீப் சந்தித்து தோனி பற்றி கேட்ட போது, அவர், “தோனி இப்போது புகழ்பெற்றவராகி விட்டார்” என்று மகிழ்ச்சியுடன் கூறியதாக ‘தி டெலிகிராப்’ பத்திரிகை அவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டது.

ஒரு முறை கயா அழகு நிலையத்திற்கு கேப்டன் தோனி சென்ற போது, அந்தச் செய்தி தீ போல் ரசிகர்களிடம் பரவ, நிலையத்தின் வாயிலில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிவிட்டனர் என்றும், அப்போது தோனி உள்ளிருந்தபோதே அழகு நிலையத்தின் ஷட்டர் அடைக்கப்பட்டது என்றும் பிறகு மாலையில் தோனியை உள்ளூர் போலீஸ் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர் என்றும் இந்த நூலில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x