Last Updated : 18 Feb, 2015 08:21 PM

 

Published : 18 Feb 2015 08:21 PM
Last Updated : 18 Feb 2015 08:21 PM

2011 உலகக்கோப்பையில் யுவராஜ் சிங் செய்ததை நான் இப்போது செய்ய விரும்புகிறேன்: ரெய்னா

2011 உலகக்கோப்பையில் தனது ஆல்ரவுண்ட் திறமையினால் தொடர் நாயகனாக எழுச்சிபெற்ற யுவராஜ் சிங் ஆடியதைப் போல இந்த உலகக்கோப்பையில் தான் திகழ்வேன் என்று சுரேஷ் ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், யுவராஜ் சிங் மட்டுமல்லாது தோனியிடமிருந்தும் நிறைய கற்றுக் கொண்டதாக ரெய்னா தெரிவித்தார்.

"நமது இயல்பூக்கங்களை பின் தொடர்ந்து விளையாட வேண்டும், இதனை நான் யுவராஜ் சிங் மற்றும் தோனியிடமிருந்து கற்றுக்கொண்டேன். யுவராஜ் சிங்கின் ரோலை நான் இந்த உலகக்கோப்பையில் செய்ய விரும்புகிறேன். நான் நன்றாக பேட்டிங், பவுலிங், பீல்டிங் செய்ய விரும்புகிறேன்.

நான் விளையாடாத போது யுவராஜ் சிங்கின் ஆட்டத்தையே பார்ப்பேன், அவர் எப்படி வெற்றிக்கு இட்டுச் செல்கிறார் என்பதை கூர்ந்து கவனிப்பேன்.

மேலும் தேவைப்பட்டால் பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தவும் செய்வேன். அதே வேளையில் ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்து எதிர்முனையில் இருப்பவருக்கும் வாய்ப்பளிப்பேன். நெருக்கடி தருணங்களில் கட்டுப்பாடுடன் ஆடவும் தயாராக உள்ளேன்.

நேராக விளையாடுவதை நேசிக்கிறேன். என்னிடம் ரன்கள் ஸ்கோர் செய்ய நிறைய தெரிவுகள் உள்ளன. ஆட்டத்தின் சில கட்டங்களில் குறிப்பிட்ட பவுலர்களுக்கு எதிராக ரன்கள் எடுக்க முடியாது போகும் அப்போது நிதானிப்பது அவசியம்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டங்கள் எப்பவும் நெருக்கடி ஆட்டமே. பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகது ஒரு வித்தியாசமான உணர்வு. 2011-இல் ஆடினோம் வென்றோம், இப்போதும் வென்றோம், இரண்டிலும் நான் அணியில் இருந்தேன்.

இனிவரும் போட்டிகளிலும் இதே போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று நம்புகிறேன். ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த 3 மாதங்கள் சரியாக அமையவில்லை. ஆனாலும் நிறைய தீவிரத்தை வெளிப்படுத்தினோம். தோனியுடன் ஒரு நல்ல கூட்டத்தில் விவாதித்தோம். அவர் ஒவ்வொரு வீரரிடமும் தனிப்பட்ட முறயில் பேசினார். நம் பொறுப்பு என்ன, எந்த மாதிரியான பங்களிப்பை செய்யப்போகிறோம் என்பதை ஒவ்வொரு வீரரிடமும் தனிப்பட்ட முறயில் தோனி கேட்டறிந்தார்.

இதுதான் தோனியின் மாஸ்டர் ஸ்ட்ரோக். ஒவ்வொரு வீரரிடமும் பேசி அவரது பங்கு என்னவென்பதை புரிய வைத்தார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி தினத்தில் நான் கொஞ்சம் பதட்டத்துடன் இருந்தேன் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், பேட்டிங்கில் களமிறங்கும் போது 2011-இல் பாக்.இற்கு எதிராக 36 நாட் அவுட் என்று நான் இருந்ததை நினைவு படுத்திக் கொண்டேன். ஏற்கெனவே நான் மொகமது இர்ஃபான், அப்ரீடி, வஹாப் ரியாஸ் ஆகியோர் பந்து வீச்சுகளை இந்தியாவில் விளையாடியுள்ளேன்.

இவ்வாறு கூறிய ரெய்னா, ஆஸ்திரேலிய மைதானங்கள் பெரிதாக இருப்பதால் விக்கெட்டுகளுக்கு இடையே ரன் ஓடுகது மிக முக்கியமான அம்சம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x