Last Updated : 19 Feb, 2015 09:57 AM

 

Published : 19 Feb 2015 09:57 AM
Last Updated : 19 Feb 2015 09:57 AM

இந்திய அணி அபாயகரமானது: ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை

இந்திய கிரிக்கெட் அணி அபாயகரமான அணி. அந்த அணியில் ஏராளமான உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் எச்சரித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு இரு முறை உலகக் கோப்பையை பெற்று தந்தவரான பாண்டிங் கூறுகையில், “ஏராளமான உலகத்தரம் வாய்ந்த வீரர்களைக் கொண்டிருக்கும் இந்திய அணி, ஒரு சில கட்டங்களில் கோப்பையை வெல்லக்கூடிய அணியைப் போன்று காணப்படாது.

ஆனால் அந்த அணி அதிரடியாக விளையாட ஆரம்பித்துவிட்டால் மிகுந்த ஆபத்தான அணியாக மாறிவிடும். இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 76 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அபாரமாக உலகக் கோப்பை போட்டியைத் தொடங்கியுள்ளது.

அவர்கள் போகப்போக சிறப்பாக ஆடுவார்கள் என நினைக்கிறேன். இந்திய அணி அடுத்த ஆட்டத்திலும் சிறப்பாக ஆடும். அதேநேரத்தில் பாகிஸ்தானை பலவீனமான அணியாகவே கருதுகிறேன். உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக டெஸ்ட் தொடர் மற்றும் முத்தரப்புத் தொடரில் இந்திய அணி தோற்றிருந்தது.

அதனால் அவர்களுக்கு இது கடினமான காலம் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் தங்களை வலுவாக்கும் முயற்சியோடு இந்த உலகக் கோப்பையை தொடங்கியுள்ளனர்.

இந்திய அணியின் பந்து வீச்சு கவலையளிப்பதாக உள்ளது. அது எப்போதும் உள்ள பிரச்சினைதான். ஆஸ்திரேலியாவிலோ அல்லது அதுபோன்ற சூழலிலோ விளையாடும்போது அவர்களின் பந்துவீச்சு பலவீன மானதாகவே இருக்கும். அதே நேரத்தில் அவர்களின் பேட்டிங் மிகச்சிறப்பாக இருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x