Published : 06 Feb 2015 10:09 AM
Last Updated : 06 Feb 2015 10:09 AM

தேசிய விளையாட்டு போட்டி: 24 பதக்கங்களுடன் தமிழகம் 6-வது இடம்

கேரளாவில் நடைபெற்று வரும் தேசிய விளையாட்டுப் போட்டியில் 24 பதக்கங்களுடன் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது.

தமிழகம் இதுவரை 9 தங்கம், 4 வெள்ளி, 11 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

இதில் டேபிள் டென்னிஸ் போட்டியில் அதிகபட்சமாக 3 தங்கமும், ஸ்குவாஷ் போட்டியில் 2 தங்கமும், டென்னிஸ், நீச்சல், பளு தூக்குதல், துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றில் தலா ஒரு தங்கப் பதக்கத்தையும் தமிழக அணி வென்றுள்ளது. ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ் போட்டிகளில் தலா 2 வெள்ளிப் பதக்கங்களும் கிடைத்துள்ளன.

50 மீட்டர் பிரஸ்ரோக் நீச்சல் போட்டியில் தமிழக வீராங் கனை ஜெய்வீணா 34.43 வினாடி யில் கடந்து புதிய சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென் றார்.

27 தங்கம் 10 வெள்ளி, 10 வெண்கலப் பதக்கத்துடன் சர்வீசஸ் அணி தொடர்ந்து முதலி டத்தில் உள்ளது. ஹரியாணா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் முறையே 2, 3-வது இடங்களில் உள்ளன. போட்டியை நடத்தும் கேரளா 4-வது இடத்தில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x