Published : 18 Feb 2015 10:27 AM
Last Updated : 18 Feb 2015 10:27 AM
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் 7-வது லீக் ஆட்டத்தில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள வங்கதேசம் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
ஆஸ்திரேலிய தலைநகர் கான்பெர்ராவில் காலை 9 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. இரு அணிகளையும் ஒப்பிடும்போது ஆப்கானிஸ்தானைவிட வங்க தேசம் அனுபவமிக்க பலம் வாய்ந்த அணியாகும்.
எனவே முதல் போட்டியில் வெற்றிக் கணக்கை தொடங்க அந்த அணி ஆர்வத்துடன் களமிறங்கும்.
5-வது முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் வங்கதேச அணி பாகிஸ்தான், இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு உலகக் கோப்பையில் அதிர்ச்சி தோல்வியை அளித்துள்ளது.
அந்த அணியில் முன்னாள் கேப்டன் சாஹிப் அல் ஹசன், கேப்டன் முர்தாசா, தமீம் இக்பால் போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர். இதனால் வங்கதேசம்ஆப்கானிஸ்தானை வெல்ல வாய்ப்புள்ளது.
அறிமுக அணி ஆப்கானிஸ்தான்
50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி இப்போதுதான் முதல் முறையாக விளையாடுகிறது. கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்றுள்ளது.
இதனால் ஆப்கானிஸ்தான் நம்பிக்கையுடன் உள்ளது. இரு அணிகளுக்கும் இப்போது இரண்டாவது முறையாக மோத இருக்கின்றன.
ஆப்கானிஸ்தான் அணியில் கேப்டன் முகமது நபி, முன்னாள் கேப்டன் நவரோஸ், தவ்லத், ஹமித் ஹாசன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். எனவே அறிமுக உலகக் கோப்பை போட்டியில் வென்று சாதனை படைக்க கடுமையாக முயற்சிப்பார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT